தளபதி விஜயின் வெறித்தனம் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!
பிக்பாஸ் இல்லத்தில் நாளுக்குநாள் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, புதிய புதிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், கவலையான தருணங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது. எவ்வளவு தான் சண்டையிட்டுக் கொண்டாலும், விளையாட்டின் போது அனைவரும் ஒன்றிணைந்து விடுகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள், தினமும் காலையில் எழுந்தவுடன், ஒரு பாடலுக்கு அனைவரும் சேர்ந்து நடனமாடுவதுண்டு. அந்த வகையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளி அன்று வெளியாகவுள்ள, பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடலுக்கு பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் குத்தாட்டம் போடுகின்றனர். இதோ அந்த வீடியோ,