தளபதி விஜய் வயது கூட கூட அதிக இளமையுடன் இருக்கிறார்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் ஆக்டொபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ திருமண கோலத்தில் இருக்கும் நயன்தாரா, விஜயை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.
இந்த போஸ்டரில் விஜய் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள், தளபதி விஜய் வயது கூட கூட அதிக இளமையுடன் இருக்கிறார் என சமூகவலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.