தளபதி 64-ல் நீ இருக்கிறது ரொம்ப சந்தோசம் மச்சி! பிரபல இயக்குனரின் ட்வீட்!
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படமானது பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிகில் படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, அந்தோணி வர்கீஸ், மாளவிகா மோகன், சாந்தனு ஆகியோர் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தில் ஆடை பட இயக்குனர் ரத்னகுமாரும் இணைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியானது.
இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில், தளபதி 64 படத்தில், நீ இருக்கிறது ரொம்ப சந்தோசம் மச்சி என ட்வீட் செய்துள்ளார்.
Happy to have u onboard machi????#Thalapathy64 https://t.co/MYcEPE6tOJ
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 3, 2019