யோகி பாபு : தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. காமெடி நடிகர்களாக கலக்கி கொண்டு இருந்த சந்தானம், சூரி, ஆகியோர் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதால் யோகி பாபுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது யோகி பாபு, கோட், இந்தியன் 2, காதலிக்க நேரமில்லை, உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.
தொடர்ச்சியாக இதனை தவிரவும் பல படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருகிறார். சம்பள விஷயத்திலும் கூட அவர் தான் அடுத்ததாக நடிக்கும் படங்களுக்கு சற்று உயர்த்தி கேட்டு வருகிறாராம். இதுவரை ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்றால் சம்பளமாக யோகி பாபு 10 லட்சம் தான் அதாவது ஒரு நாள் கணக்கு படி 10 லட்சம் சம்பளம் வாங்கினாராம். எத்தனை நாள் கால்ஷீட் கேட்டு நடித்து கொடுக்கிறாரோ அதற்கு ஏற்றது போல சம்பளத்தை வாங்கி வந்தாராம்.
ஆனால், தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் வருகிறது என்ற காரணத்தால் தனது ஒரு நாள் சம்பளத்தை 12 லட்சமாக உயர்த்தி இருக்கிறாராம். தன்னிடம் தேடி வரும் தயாரிப்பாளர்களிடமும் தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கூறிவிடுகிறாராம். குறைத்து பேசினால் கூட 10 லட்சம் இருந்தால் மட்டும் தான் படத்தில் நடிக்கவே சம்மதம் தெரிவிக்கிறாராம். அது மட்டுமின்றி, ஒரு படத்தில் நடிக்க பணம் வாங்கிவிட்டு அடுத்ததாக அதே கால்ஷீட்டை வேறு படத்திற்கும் கொடுத்து விடுகிறாராம்.
இது மட்டுமின்றி, கமிட் ஆகி நடித்து வரும் படங்களை தவிர்த்து நடித்து முடித்து இருக்கும் பாதி படங்களுக்கு டப்பிங் பேசாமலும் யோகி பாபு இருக்கிறாராம். இந்த தகவல் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…