கவினுக்கு கம்பேக் லோடிங்..ஜெயம் ரவியுடன் மோத அதிரடி முடிவு?

jayam ravi and kavin

கவின் : டாடா படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். ஸ்டார் படத்தில் கவினுடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் டாடா அளவிற்கு அவருக்கு பெரிய வெற்றி படமாக அமையவில்லை என்றே சொல்லலாம். எனவே, டாடா மாதிரி ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘ப்ளடி பெக்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கி வருகிறார். படத்தினை, இயக்குனர் நெல்சன் தயாரிக்கிறார். இந்த படத்தில் கவின் பிச்சைக்காரர் தோற்றத்தில் நடிக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் போதே இது பலருக்கும் தெரிந்தது. இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இதனையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த படத்தினை வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்த படத்தினை, பைவ் ஸ்டார் படம் தான் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை வாங்கி இருக்கிறதாம். எனவே, செப்டம்பர் 27-ஆம் தேதி படம் வெளியாவது கிட்டத்தட்ட உறுதி என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதே, செப்டம்பர் 27-ஆம் தேதி  தான் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் பிரதர் திரைப்படமும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இரண்டு திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ள காரணத்தால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்