மீண்டு வா சுஜித்! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட்!

குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும் .. மீண்டு வா சுஜித் ... all our prayers with you #prayforsujith#SaveSujith pic.twitter.com/FZWgwG9IB1

திருச்சி மாவட்டத்தில் நேற்று 5.30 மணி அளவில் குழந்தை சுஜித்(2) ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இன்று காலை குழந்தை 70 அடிக்கு சென்றதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் சத்தத்தை கேட்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து, பல பிரபலங்களும் குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுமாறு தெரிவித்து வருகிற நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும். மீண்டு வா சுஜித். அனைவரும் குழந்தைக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.’ என்றும் பதிவிட்டுள்ளார்.

unknown node