நமது குழந்தை பருவ சிறப்பான சம்பவங்களை நினைவு கூற வைக்கும் கோமாளி படத்திலிருந்த்து ‘ஒளியும் ஒலியும்’ பாடல் வெளியாகியுள்ளது!
நடிகர் ஜெயம் ரவி தற்போது 9 கெட்டப்புகளில் நடித்து வரும் திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே பைசா வசூல் எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஒளியும் ஒலியும் எனும் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலில் நமது குழந்தை பருவ சம்பவங்களை நினைவு கூறும் வகையில் வரிகள் அமைந்துள்ளது. தற்போது, இந்த பாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.