செல்போனை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு பேசுகிறார் பத்ரி வெங்கடேஷ். அதர்வாவை வைத்து பாணா காத்தாடி கொடுத்த இயக்குநர். அடுத்த படத்தின் டைட்டிலே கிறங்கடிக்குது. செம போத ஆகாத. என்ன தலைவா, இப்படி இறங்கிட்டீங்க? மது, மாது எல்லாமே போதை வஸ்துதான். போதை ஏறினால் புத்தி கெட்டுடும். அது தடுமாறினா தப்பான முடிவு எடுப்போம். எந்த போதைனாலும் அது சிலமணி நேரத்துல தெளிஞ்சிடும். ஆனா, அந்த டைம்ல நாம எடுத்த முடிவு, நம்ம வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். […]
அஜித்தின் விவேகம் படம் எப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பில் வெளியாகி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் நடித்த எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாரானதோடு பெரிய தொகைக்கும் வியாபாரம் ஆகியிருந்தது. இந்த நிலையில் அஜித்தின் விவேகம் பட வியாபாரத்தை விட விஜய்யின் மெர்சல் படம் 30% அதிக வியாபாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. தற்போது விஜய்யின் மெர்சல் பட டீஸர் […]
சிங்கம் 3 படத்திற்கு பின்பு சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். 1980 காலகட்டத்தில் நடப்பதுபோல் இப்படம் அமைந்துள்ளது.
தளபதி விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் துவங்கியுள்ளது. படத்தின் டீஸர் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வரவுள்ள நிலையில், இன்று சென்னையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெர்சல் படத்தின் மோஷன் போஸ்டர் திரையிடப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரசிகர்கள் “சிஎஸ்கே. .சிஎஸ்கே..” என தொடர்ந்து போட்டி முழுவதும் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.