சினிமா செய்திகள்

GOAT திருவிழா! விஜய் ரசிகர்களுடன் ‘வைப்’ செய்த மூதாட்டி!

பாலக்காடு : பொதுவாகவே விஜயின் படம் வெளியாகிறது என்றால் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளாவிலும் திரையரங்க வாசல்களில் திருவிழா கோலமாகத்தான் காட்சியளிக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்றே கூறலாம். அதிலும், இன்று GOAT திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இதனால், அதிகாலை 4 மணி முதலே கேரளாவில் விஜய் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில், இந்த கொண்டாட்டத்தின் போது பாலக்காட்டில் உள்ள திரையரங்கின் வாசலில் மூதாட்டி ஒருவர் விஜய் […]

goat 3 Min Read
vijay fan dance

தமிழ் சினிமாவில் பாலியல் புகார்.. தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்.!

சென்னை : மலையாள நடிகைகள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை வெளிச்சம் போடு காட்டிய ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் புயலை கிளப்பி உள்ள நிலையில், தமிழ் நடிகைகளும் பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இந்த பாபரப்பான சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘SIAA-GSICC ‘ கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், பாலியல் […]

Artistes Association 7 Min Read
south indian association

தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவு: முதல் ஆளாக சென்ற சூர்யா.!

சென்னை : நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், மகாநதி, பட்டியல் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்ற நிலையில், நேற்று காலமானார்.  ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தை நடத்தி வந்த தயாரிப்பாளர் மோகன் நடராஜனின் மறைவு சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களது சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு […]

Film Producer 3 Min Read
Producer Natarajan - SURIYA

ராதிகா ஏன் இந்த புகாரை அப்போதே சொல்லவில்லை? சரத்குமார் விளக்கம்.!

சென்னை : மலையாள படப்பிடிப்பின் போது கேரவன்களில் மறைக்கப்பட்ட கேமராக்களிலிருந்து பெறப்பட்ட வீடியோப் பதிவுகளை அந்த இடத்தில் உள்ள ஆண்களால் பார்க்கப்பட்டதாவும், இந்த சம்பவத்திற்குப் பிறகு, தனது ஆடைகளை மாற்ற ஹோட்டல் அறையை மட்டுமே பயன்படுத்தியதாக கூறி பரபரப்பை கிளப்பினார் நடிகை ராதிகா. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதால், மலையாளப் படத்தில் பணியாற்றிய தனது கடந்த கால அனுபவத்தை நினைவு கூர்ந்ததாகவும் அந்நிகழ்வை ஒரு விளம்பரக் குறிக்கோளோடு தான் வெளிப்படுத்தவில்லை என்று நேற்றைய தினம் ராதிகா விளக்கம் […]

#Chennai 8 Min Read
Radhika Sarathkumar

“துன்புறுத்தல் பற்றி பேசுபவர்களை ஒதுக்கி வைக்கும் மலையாள சினிமா” – வின்சி அலோசியஸ்.!

கேரளா : மலையாள திரையுலகின் நடிகைகளுக்கு நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டிய ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தனக்கு சினிமா துறையில் எந்த பாலியல் தொல்லைகளையும் எதிர்கொள்ளவில்லை, ஆனால் சம்பளம் ரீதியாக பதிப்பாக்கப்பட்டதாக மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். திரையுலகில் வந்து 5 ஆண்டுகள் ஆன பிறகும் தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்றும், சம்பள விஷயத்தில் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்கள் […]

Committee Report 4 Min Read
Vincy Aloshious

வீட்டில் போதை பார்ட்டி : பாடகி சுசித்ரா மீது ரீமா கல்லிங்கல் அவதூறு வழக்கு.!

கேரளா : மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக ஹேமா கமிட்டி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்த அறிக்கையில் மலையாள திரையுலகில் பரவலாக போதை பொருட்கள் நடமாடுவதாகவும் கூறியிருந்தது. ஆனால், போலீசார் இது தொடர்பாக எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் தனது வீட்டில் அடிக்கடி பார்ட்டி நடத்தியதாகவும், கேரியர் பாதிக்கப்பட்டதற்கு அவர் நடத்திய போதை பார்ட்டிகளே காரணம். இதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தமிழ் பாடகி […]

#Suchitra 5 Min Read
Reema Kallingal case against singer Suchitra

பாலியல் புகார்.. மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்கு பதிவு.!

இடுக்கி : கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் எதிராக பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், கேரள ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர், 2019 இல் பாபுராஜ் தனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அடிமாலியில் உள்ள ரிசார்ட் மற்றும் ஆலுவாவில் உள்ள வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக […]

actor 3 Min Read
actor Baburaj

மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை.. சிபிஐ விசாரிக்கக் கோரி மனு!

கேரளா : மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்திவரும் நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்ற மனுத் தாக்கல் செயப்பட்டு இருக்கிறது. சினிமா துறையில் பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், ஹேமா கமிட்டியின் முழு […]

#CBI 5 Min Read
CBI - Hema Committee Report

பாலியல் வன்கொடுமை வழக்கு: முகேஷ் மற்றும் சித்திக் முன்ஜாமின் கேட்டு மனு.!

கொச்சி : மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் விவரங்களை ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்ட பிறகு, மலையாளத் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் மீது, நடிகைகள் சிலர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அதன்படி, மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 17 புகார்கள் வந்த நிலையில், இதுவரை நடிகர்கள் சித்திக், முகேஷ், எடவேல பாபு ஆகியோர் மீது வன்கொடுமை […]

#Kerala 5 Min Read
Mukesh - Siddique

ஹோட்டலில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுக்கு சீண்டல்.. ஒடியன் பட இயக்குனர் மீது வழக்கு பதிவு.!

கொச்சி : ஹேமா கமிட்டி விவகாரம், மலையாள சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் புயலை கிளப்பியுள்ளது. அறிக்கை வெளியானதில் இருந்து, தைரியமாக நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல், தொந்தரவு பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழ் நடிகைகளும் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், கோட்டயத்தைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மீது மருது காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விளம்பரத்தில் வாய்ப்பு தருவதாக […]

Committee Report 4 Min Read
Odiyan director Shrikumar Menon

இளைஞரை கூட விட்டு வைக்காத மலையாள இயக்குனர்.. பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு.!

கோழிக்கோடு : பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் ரஞ்சித் மீது கசாபா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது இவர் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வழக்காகும். ஏற்கனவே, பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கொச்சி நகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், இயக்குனர் ரஞ்சித் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது […]

Committee Report 4 Min Read
Case filed against Ranjith

“ஹேமா கமிட்டி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – மன உளைச்சலுக்கு ஆளான அமலாபால்.!

கொச்சி : மலையாள திரையுலகின் நடிகைகளுக்கு நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டிய ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு  வருகின்றனர். அந்த வகையில், ஹேமா கமிட்டி அறிக்கை தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். இதுவரை நடிகைகள் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்களின் பேரில் பலரது மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வரிசையில், இயக்குனர் ரஞ்சித் மீதும் இன்று புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Amala Paul 4 Min Read
Hema Committee report shocks - Amala Paul

“நான் இங்குதான் இருக்கிறேன்., எங்கும் ஓடி ஒளியவில்லை..” மோகன்லால் பரபரப்பு பேட்டி.! 

திருவனந்தபுரம் : ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகையே புரட்டி போட்டுள்ளது ஹேமா கமிஷன் அறிக்கை. நடிகைகள், பெண் திரை கலைஞர்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை, எம்.எல்.ஏ, மூத்த நடிகர்கள், நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் என பலரது பெயர் அடிபடவே கேரள திரையுலகம் மட்டுமின்றி தென் இந்திய திரையுலகமே ஆட்டம் கண்டுவிட்டது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று போலீசார், பல முக்கிய பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இப்படியான சூழலில், கேரளா […]

#Mohanlal 9 Min Read
HEMA Committee Report submitted to CM Pinarayi Vijayan - Actor Mohanlal

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை.. அறிக்கை வெளியிடுங்க! சமந்தா போட்ட பதிவு…

தெலுங்கானா : தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரித்த குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே, டோலிவுட்டில் காஸ்டிங் கவுச் பற்றி  சில ஹீரோயின்கள் பேசியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், சமந்தாவின் இந்த பதிவு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமாகமிட்டி அறிக்கைக்கு பின், மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாக வெளிவர துவங்கி […]

#Samantha 6 Min Read
Telugu Film Industry - Samantha

ஹேமா கமிட்டி அறிக்கை: இயக்குனர் ஆஷிக் அபு… முக்கிய பொறுப்பில் இருந்து விலகல்.!

கொச்சி : ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக இயக்குனர் ஆஷிக் அபு ஃபெப்காவில் இருந்து விலகினார். மலையாளத் திரையுலகில் பாலியல் சுரண்டல் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை மீதான தலைமையின் நிலைப்பாட்டை விமர்சித்த சில நாட்களில்,  இயக்குனர் ஆஷிக் அபு, கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனம் (ஃபெஃப்கா) இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். மலையாள திரையுலகில், பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை […]

Aashiq Abu 7 Min Read
Aashiq Abu resigns from FEFKA

மற்றொரு நடிகைக்கு பாலியல் தொல்லை.. நடிகர் ஜெயசூர்யா மீது 2வது வழக்குப்பதிவு.!

திருவனந்தபுரம் : மற்றொரு நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது, நேற்றைய தினம் (வியாழக்கிழமை) மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டுள்ளதால், நடிகர் ஜெயசூர்யாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள திரைப்பட தளத்தில், ஜெயசூர்யா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். அந்த […]

#Kerala 4 Min Read
Second Case Filed Against Actor Jayasurya

அடேங்கப்பா!! GOAT படத்தின் டிக்கெட் விலை இவ்ளவா.! ரசிகர்கள் புலம்பல்..

சென்னை : விஜய் நடித்துள்ள ‘GOAT’ படத்தின் டிக்கெட் ரோஹினி திரையரங்கில் அதிகாரப்பூர்வமாக 390 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெளி வரவிருக்கும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப்” ஆல் டைம் (GOAT) திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது. இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் வேகமாக டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் சென்னை […]

FDFS 7 Min Read
Goat Movie Ticket

பாய்ந்தது வன்கொடுமை வழக்கு.. முதல்வரிடம் நடிகர் முகேஷ் விளக்கம்.!

திருவனந்தபுரம் : நடிகை பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற […]

KERALA CM 4 Min Read
actor mukesh kerala cm

ஜூனியர் ஆர்ட்டிஸ்டிடம் அத்துமீறய பிருத்விராஜ் பட உதவி இயக்குனர்.. ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு.!

திருவனந்தபுரம் : பிருத்விராஜ் இயக்கிய ‘ப்ரோ டாடி’ படப்பிடிப்பில் ஜூனியர் பெண் ஆர்ட்டிஸ்டிடம், உதவி இயக்குனர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மலையாள திரையுலகில் நிகழ்ந்துவரும் ‘MeToo’ 2.0 வெர்ஷன் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு, மலையாள நடிகர்கள் மீது எழுந்த பாலியல் புகார்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை […]

Hema Committee 7 Min Read
Junior artist space is violated

கதை திருட்டு சர்ச்சை : புகார் அளித்த எழுத்தாளர்! நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!

சென்னை : ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘வாழை’ திரைப்படம் என்னுடைய கதை என எழுத்துளார் சோ. தர்மன் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட்-23ம் தேதி ‘வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை ஈர்ப்பில் ஆழ்த்தியது. மேலும், இயக்குநர் மாரி செல்வராஜின் சிறு வயதில் நடந்த உண்மையைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்று மாரி செல்வராஜ் படத்தின் ப்ரோமஷனில் கூறி இருந்தார். இதனால், பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி விமர்சன […]

Cho Dharman 8 Min Read
Cho Dharman - Mari Selvaraj