சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் திரையரங்கிற்கு வருகை புரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் பிரஸ் மீட் நடத்தப்பட்டது. பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர் போன வருஷம் அரண்மனை 4, இந்த வருஷம் மதகஜராஜா இத பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதற்கு, இயக்குநர் […]
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வந்தார். அதன்படி, தற்பொழுது தன்னுடைய விருப்ப விளையாட்டான கார் ரேஸிங் பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அட ஆமாங்க.. நடிகர் அஜித் குமார் இப்பொது துபாயில் நடைபெறும் 24H கார் ரேஸில் கலந்துகொண்டுள்ளார். சமீபத்தில், கூட அஜித் கார் ரேஸிங் பயிற்சியின் போது, பயங்கரமான விபத்தில் சிக்கினார். ஆனால், சிறிய காயம் கூட ஏற்படாமல் தப்பினார். இந்நிலையில், […]
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில், ஜனவரி 10 ஆம் தேதி வெளிவரவிருந்த ‘விடாமுயற்சி’ படம், எதிர்பாராத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. புதிய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க அவரது கார் ரெஸ் ரசிர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அந்த வகையில், 2 நாட்கள் முன்பு அஜித் கார் ரேஸிங் பயிற்சியின் போது, மிகவும் பயங்கரமான விபத்தில் சிக்கினார். இந்த […]
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, ரெட்ரோ திரைப்படம், மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 கோடை விடுமுறையை குறிவைத்து படக்குழு இந்த வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். இந்த படத்தில், பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்க்ஷன் த்ரில்லர் நிறைந்த காதல் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. […]
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம் மத்திய போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் வயநாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கண்ணுரில் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழாவில் ஆபாச கருத்துகள் தெரிவித்ததாக பாபி செம்மனூர் மீது, நடிகை ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார். ஏற்கனவே, தனது பேஸ்புக் […]
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கை நடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் கொடுத்திருக்கிறார். விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி,விஷால் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். […]
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சரசரவென்று சுழன்று நின்றது. விபத்து நடந்த உடனே, காரில் இருந்து அஜித் வெளியேறும் காட்சி அனைவருக்கும் நிம்மதி அளித்தது. விபத்தின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் இல்லை என தெரியவந்துள்ளது. ஆம், அவரது போர்ஷே 992 சேதமடைந்தது, ஆனால் அவர் காயமின்றி வெளியே […]
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சர்ரென சுழன்று… சுழன்று நின்றது. உடனே அங்கிருந்த முதலுதவி செய்பவர், அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் இல்லை என தெரியவந்துள்ளது. நெஞ்சை பதற வைக்கவும் அந்த கோர காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோக்களை பார்த்து அஜித்தின் […]
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் “கங்குவா” திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும் அந்த அளவிற்கு பெரியதாக சாதனை படைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ரசிகர்களின் பெரிய ஆவலுக்கு இப்படம் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இந்த நிலையில், 97-வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான விருது, பிரிவின் தகுதிப்பட்டியலில் சூர்யாவின் ‘கங்குவா’ இடம்பிடித்துள்ளது. இந்த தகவலை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 Oscars: […]
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த திருமண வீடியோவானது நெட்ப்ளிக்ஸ் OTT இணையதளத்தில் நயன்தாரா சினிமா வாழ்வு மற்றும் திருமண நிகழ்வு ஆகியவை சேர்ந்து வெளியாகி இருந்தது. இந்த வீடியோவில் நானும் ரௌடி தான் படத்தில் உள்ள படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அப்பட தயாரிப்பாளர் தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நயன்தாரா விக்னேஷ் சிவன் […]
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் “குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். அதன்படி, குட் பேட் அக்லி படக்குழு தமிழ் புத்தாண்டை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. அதாவது, திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு என்பதால், படம் ஏப்ரல் 10-ம் தேதி (வியாழன்) அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக, அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு வெளியாக […]
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில், படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பு பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய் கொண்டே செல்கிறது. அதாவது, ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ‘பிசாசு 2’ படத்தை தயாரிப்பதற்கு முன்பு, ‘இரண்டாம் குத்து’ படத்தின் விநியோக உரிமையை பெற்றிருந்தது. அப்பொழுது, பிளையிங் ஹார்ஸ் […]
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று (ஜனவரி 2ம் தேதி) கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களை சாக்ஷி அகர்வால், சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், “தனது சிறு வயது நண்பரான நவ்நீத்தும், தானும் “என்றென்றும் என்றானோம்” ஒன்றாக வளர்ந்த இருவரும் இப்போது புதிய […]
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பு பணிகள் மற்றும் பிற காரணங்களால் வெளியீட்டு தேதி பிந்திய தேதிக்கு மாற்றப்பட உள்ளது. அதன்படி, இந்த மாத இறுதியில் படத்தை வெளியிடப்படலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்கையில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப் போனதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. அதாவது, ‘இரவு, பகலாக பின்னணி இசையமைக்கும் […]
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில், ராம் சரண் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ராம் சரண் தவிர படத்தில் கியாரா அத்வானி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல் கலந்த ஆக்சன் நிறைந்த இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ம் தேதி தமிழ், தெலுங்கு, […]
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, ‘திரு மாணிக்கம்’ என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி தவிர பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேசி, சாம்ஸ், ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார், அறிக்கை வாயிலாக தனது […]
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து ஓய்வில் இருக்கும் சிவராஜ்குமார், தற்போது முழுவதும் குணமாகி விட்டதாக அவரின் மனைவி கீதா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இவர், ஜெய்லர் படத்தில் ரஜினியின் நண்பராக நடித்திருப்பார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சிவராஜ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சமீபத்தில், அவருக்கு அறுவை […]
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு தானே சாட்டையடி போராட்டம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அட ஆமாங்க… தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு ‘திரு.மாணிக்கம்’ என்கிற படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ் ப்ரொமோஷன் செய்திருக்கிறார். இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ‘திரு.மாணிக்கம் படத்தில் அனன்யா, பாரதிராஜா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில், திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் […]
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்று கிறிஸ்மஸ் தினத்தன்று அறிவித்தனர். அதன்படி, முதல் பாடலான “Sawadeeka” என்கிற பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, எம்பி 3 வடிவில் ஆடியோவாக வெளியாகியுள்ள இந்த பாடலின் லிரிக்ஸ் வீடியோ மாலை 5:05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொது, கானா, ஆப்பிள் மீயூசிக், ஸ்பாட்டிபை, அமேசான் உள்ளிட்ட இணையத்தளங்களில் படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. நாட்டுப்புற இசைப் […]
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்பொழுது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் (ரேவதி) உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிச,4 அன்று தொடங்கிய இந்த விவகாரம், ஓயாமல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆம், கூட்ட நெரிசல் சிக்கி பெண்ணின் மரணத்திற்கு காரணமானதாக கூறி, அல்லு அர்ஜுன் […]