சென்னை : பிரபல யூடியூபர் மற்றும் பைக்கருமான TTF வாசன், அடிக்கடி தனது பொறுப்பற்ற வாகனம் ஒட்டும் நடவடிக்கை காரணமாக கைது செய்யப்படுவார். பின்னர், ஜாமினில் வெளியே வந்து விடுவார். இது ஒரு பக்கம் இருக்க, ‘மஞ்சள் வீரன்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக TTF வாசன் அறிமுகமாக உள்ளார் என பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இயக்குநர் செல் ஆம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருபிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போஸ்டர் […]
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் (அக்டோபர் 2ஆம் தேதி) காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு,வெளியாகும் என லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது, வெளியிடப்பட்ட வேட்டையன் படத்தின் டீசர் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் டீசர் ரஜினியின் முந்தைய படங்களான ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ போல் உள்ளதாக விமர்சித்த […]
டெல்லி: ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 8ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விழாவில் அவருக்கு விருது வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். Mithun Da’s remarkable cinematic journey inspires generations! Honoured […]
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கிய ‘லப்பர் பந்து’ படம் செப்டம்பர் 20ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஹரீஷ் கல்யாணும், தினேஷும் மோதிக் கொள்கின்றனர். அவர்களின் ஈகோவால் காதல் உடைந்தநிலையில் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விஜயகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், இந்த படத்தில் வீட்டின் சுவரில் கேப்டன் சித்திரம், பைக்கில் கேப்டன் ஸ்டிக்கர் […]
ஹைதராபாத் : தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் உருவான “தேவரா” படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை ஹைதராபாத்தில் பார்க்க வந்த ரசிகர்கள் ஆர்வமிகுதியில் கட்அவுட்டுக்கு ஆரத்தி காட்டியதில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, தேவரா FDFS கொண்டாட்டத்தின் போது, ரசிகர்கள் பட்டாசு வெடித்ததில் NTR-ன் 60 அடி கட் அவுட் பற்றி எரிந்தது என்றும், ஹைதராபாத் சுதர்சன் திரையரங்கில், தீ விபத்து சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. #DevaraDay […]
கொச்சி: கடந்த 2016-ல் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்காட் ஹோட்டலில் ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிக்குப் பிறகு, மலையாள நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் நடிகை ஒருவர் போலீஸாரிடம் குற்றம் சாட்டினார். இதன் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகர் சித்திக் மீது, பாலியல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, ‘அம்மா’ அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சித்திக் ராஜினாமா செய்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கேரள […]
கேரளா : இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் கடந்த வருடம் மே மாதம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளாவில் உள்ள இளம்பெண் களை வெளிநாடுகளுக்கு கடத்தி பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக்குவதாக அதில் காட்சிப்படுத்தி இருந்தனர். இது உண்மை சம்பவ கதை என்றும் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து. இந்த படத்துக்கு கேரளாவில் எதிப்பு கிளம்பியதால் 10 சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன. படத்தில் அடா சர்மா, பிரணவ் மிஷரா, யோகிதா […]
கொச்சி: மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகர் எடவேல பாபு மீது, ஐபிசி பிரிவு 354, 376 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் செப்டம்பர் 5ஆம் தேதி எடவேல பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், அந்த நடிகை அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், எடவேல பாபுவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர், இன்று கடலோர காவல்நிலைய தலைமையகத்தில் 3 மணி நேர […]
திருவனந்தபுரம் : மலையாள நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விச ரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் மலையாளஇயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்பட சினிமா கலைஞர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்தது. இது தொடர்பாக, பிரபல மலையாள முன்னணி நடிகர்களான சித்திக், ஜெயசூர்யா, நிவின் பாலி, மணியன் பிள்ளை ராஜு, முகேஷ், பாபுராஜ், இயக்குநர் ரஞ்சித் என பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த […]
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது. நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக, நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில், ஆரம்பமே இப்படியா என்கிற வகையில், பிக் பாஸ் செட்டில் விபத்து ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே, EVP பிலிம்சிட்டியில் பிக்பாஸ் பிக் பாஸ் செட் அமைக்கும் பணியின் போது ஊழியர் ஒருவர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். நிகழ்ச்சி தொடங்க, இன்னும் சில […]
சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ அல்லது பைக்கோ பிடித்துவிட்டால், உடனே அதை வாங்கிவிடுவார். அடிக்கடி, தனது விடுமுறை நேரத்தில் பைக்கில் ரைட் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது, ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித் குமார், படத்தில் தனது பகுதிகளுக்கான போர்ஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதனால், இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது. […]
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது “ஆஸ்கர் விருது” தான். இந்த விருந்தானது, ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, விழாக்களில் பெரிய அளவில், தமிழ் படங்கள் தேர்ந்தெடுக்க படாதது ஆண்டுதோறும் பேசுபொருளாகிவிடும். ஒரு சில தமிழ் படங்களுக்கு விருதுகள் கிடைத்தாலும், நாமினேஷனில் இடம்பெற்றாலும், கூட சில நல்ல படங்களுக்கு கிடைப்பதில்லை. இதனாலே, தமிழ் சினிமாவை சேர்ந்த சில இயக்குநர்கள் வெளிப்படையாக முன் […]
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழக அரசுக்கும் தனித்தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு : நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் […]
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை 7 சீசன்கள், வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் தொடங்குவதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. தொகுப்பாளர் மாற்றம் கடந்த 7 சீசன்களாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த, கமல்ஹாசன் படங்களில் கவனம் செலுத்தி வருவதன் காரணமாக 8-வது சீசனை “தொகுத்து வழங்கவில்லை” என கூறி, தற்காலிகமாக விலகிக்கொள்வதாக அறிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து […]
கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 2016 ஜனவரி 28ம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்காட் ஹோட்டலில் ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிக்குப் பிறகு, சித்திக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை போலீஸாரிடம் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, ‘அம்மா’ அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சித்திக் ராஜினாமா […]
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருதுக்கு இந்திய சினிமாவில் இருந்து 10 இந்தி, 6 தமிழ், 5 மலையாளம், 3 தெலுங்கு படங்கள் உள்பட 28 திரைப்படங்கள் செல்கின்றன. இதில், இந்தியா சார்பாக அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய ‘லாப்பட்டா லேடிஸ்’ (இந்தி) திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருது […]
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள “கொட்டுக்காளி” திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும் பாராட்டுகளை தாண்டி விருதுகளை குவித்து வருகிறது. தற்பொழுது, ரஷ்யாவில் கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்ற 22வது ’Amur Autumn’ சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் சூரி மற்றும் நடிகை அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் GRAND PRIX AWARD விருதை வென்றது. இதனை நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன், தி […]
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79) ) உடல்நலக்குறைவால் காலமானார். மலையாள திரையுலகில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் கமல் நடித்த ‘சத்யா’ படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி மலையாளத்தில் கமலுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொன்னம்மா, எர்ணாகுளம் லிசி மருத்துவமனையில் நேற்று மாலை 5:30 மணியளவில் காலமானார். இன்று காலை 9 […]
சென்னை : ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான “மனசிலாயோ” பாடலுக்கு நடிகர் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து vibe செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடலுக்கு நடன இயக்குநருடன் நடிகைகள் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி ஆகியோர் மேடையில் ஆடிய நடனம் அங்கு இருந்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து மேடையில் பேசிய ரஜினி […]