ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று செய்திகள் வெளியானது. தற்போது, கல்பனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இப்போது சுயநினைவை பெற்றுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. அவரது வீட்டின் கதவுகள் இரண்டு நாட்களாக திறக்கப்படாததால், அப்பகுதி மக்கள் […]
சென்னை : திரைப்பட தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்த் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. திரைப்படத் தயாரிப்புக்காகக் கடன் வாங்கிய தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் சிக்கலில் சிக்கியுள்ளனர். சென்னை டி.நகரில் உள்ள தெற்கு போக் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் பங்களாவின் ஒரு பகுதியை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த் ரூ.3.74 கோடி […]
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான ரான்யா, துபாயிலிருந்து நேற்று புறப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் அவரைகைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நடிகை ரான்யா ராவ், கிச்சா சுதீப்புடன் மாணிக்யா உள்ளிட்ட கன்னடப் படங்களிலும், ‘பதாகி’ மற்றும் ‘வாகா’ போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். தகவலின்படி, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை […]
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆம், சமூக வலைத்தளங்களில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் பாடகர் யேசுதாஸ் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாட்டில் செய்திகள் வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், தனது காந்த குரலில் பாடி ரசிகர்களை ஈர்த்தவர் பிரபல பாடகர் K.J.யேசுதாஸ். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள […]
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு 7.03 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அஜித் நடித்துள்ள இரண்டு படங்களில் ஒன்றான நடிகர் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ரசிகர்களின் கவனம் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு திரும்பியுள்ளது. ‘விடாமுயற்சி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை, இதனால் குட் […]
சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் ‘டிராகன்’ வெளியானதிலிருந்து, இந்தப் படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் மிகுந்த விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்திய மதிப்பீட்டின் படி, முதல் நாளில் ரூ 6.5 கோடியும் 2வது நாளில் ரூ. 10.8 கோடியும், 3வது நாளில் ரூ.11.5 கோடி என இந்தப் படம் மொத்தமாக ரூ.28.80 கோடி வசூல் செய்துள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் வெற்றிக்காக இயக்குநர்கள், நடிகர்கள் […]
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இரு படங்களும் காமெடி, காதல் கலந்து ஃபீல் குட் ஜானரில் வெளியாகி இன்றைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் குறிப்பாக, பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் வெளியான ‘டிராகன்’ படம் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் வெளியான 2 நாள்களில் சுமார் ரூ.25 கோடி வரை உலகளவில் […]
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் மூன்றாவது இடம் பிடித்து அசத்தினார். அதனைத்தொடர்ந்து தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் பரபரப்பாக கலந்துகொண்ட அஜித், 2 முறை விபத்தில் சிக்கியுள்ளார். முதல் முறை நடந்த விபத்தில் இருந்து மீண்டு வந்தாலும், இரண்டாவது முறை மீண்டும் விபத்து ஏற்பட்டு இரண்டு முறை கார் கவிழ்ந்துள்ளது. இதில், கார் தலைகீழாக உருண்டு […]
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் மற்றும் காயத்ரி லோஹர் ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பைப் பெற்றுள்ளது. […]
சென்னை : ‘எந்திரன்’ திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்திரன் படத்துக்காக இயக்குனர் ஷங்கர் பெற்ற பணத்திற்கு சமமான சொத்துக்களைதான் தற்போது அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் குற்றவாளி என உறுதியானால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத் திருட்டு அல்லது காப்புரிமை மீறல் என்கிற அடிப்படையில், பணமோசடி தடுப்புச் […]
சென்னை : அறிமுக இயக்குநர் சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள ‘Kiss’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளது. இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திரைப்படமான ‘KISS’ டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய காதல் கதையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி தங்கள் வேடங்களில் அழகாகத் தெரிவது மட்டுமின்றி அழகாக […]
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “கண்ணாடி பூவே” பாடல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘கங்குவா’ திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்பதால், சூர்யா ரசிகர்கள் ரெட்ரோ மீது அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். இந்தப் படத்தில் நாயகி பூஜா ஹெக்டே தவிர ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், கருணாகரன், பிரேம் குமார், ராமச்சந்திரன் துரைராஜ், […]
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டு படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் மே 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காதல் படங்களில் ஜாக்கோ பாயாக வலம்வரும் விஜய் தேவரகொண்டா, இந்த படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். டீசரில், விஜய் தேவரகொண்டா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. போருக்குத் தயாராக இருக்கும் […]
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இப்படி இருக்கையில், விழா ஒன்றில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “ராம் சரணின் பரம்பரை தொடர, அவருக்கு மகளுக்குப் பதிலாக ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக” கூறினார். சிரஞ்சீவிக்கு ஸ்ரீஜா கொனிடேலா மற்றும் சுஷ்மிதா கொனிடேலா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு நவிஷ்கா, நிவராதி, சமாரா மற்றும் […]
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை வேடங்களில் நடிப்பேன் என்று அண்மைய பேட்டி ஒன்றில் கூறிருக்கிறார். சினிமா வாய்ப்புகளைத் தேடி மதுரையிலிருந்து சென்னை வந்தபோது, பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த சூரி, தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த போது அவரை ஆதரித்து, தனது வீட்டிலேயே கவனித்துக் கொண்டவர் நடிகர் போண்டா மணி. இப்படி, சினிமாவில் பல்வேறு சிரமங்களைத் தாண்டி வந்த நடிகர் சூரிக்கு தற்போது, மதுரை […]
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர் புதிதாக க்ரிப்டோ கரன்சியை உருவாக்கி இருப்பதாகவும், உடனடியாக அதை வாங்குமாறும் தெரிவித்திருந்தார். பின்னர், இன்ஸ்டாகிராமில் தனது அக்கவுண்ட் ஹேக் ஆகிவிட்டதாக கூறியிருக்கும் அவர், அதனை சரி செய்யும் வரை போஸ்ட் செய்வது தான் அல்ல என்றும் த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார். தனது சமீபத்திய படமான விடாமுயர்ச்சியின் வெற்றியில் தற்போது திகைத்து வரும் த்ரிஷாவுக்கு இது அதிர்ச்சியை […]
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘ட்ராகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு லோஹர், VJ சித்து, ஹர்ஷத், சினேகா, பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி, இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர், ரசிகர்களிடமிருந்து அமோக […]
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு வருகிறார். அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் கார் பந்தைய அணியை சொந்தமாகக் கொண்டு வழிநடத்தி வருகிறார். இந்த அணி அண்மையில் துபாயில் நடைபெற்ற ரேஸிங்கில் பங்கேற்று குறிப்பிட்ட பிரிவில் 3வது இடம் பிடித்தது. அப்போதே பயிற்சியின்போது அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இருந்தும், தனது அணி வெற்றி பெற […]
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் கதாபாத்திரங்களை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக படக்குழு அறிவிப்பு. மலையாளத் திரைப்படமான “எம்புரான்” படம் மலையாளத் தவிர்த்து தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அதன்படி, இந்தப் திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நாளை முதல் 18 நாட்களில் இப்படத்தில் நடிக்கும் 36 கதாபாத்திரங்களின் தோற்றம் வெளியிடப்பட […]
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இறுதியாக நேற்று (பிப்ரவரி 6) திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் சென்னையில் மட்டும் சுமார் ரூ.2.3 கோடி வசூல் செய்துள்ளதாக வெளிவந்துள்ளது. ஆனால், இந்தப் படம் அஜித்தின் முந்தைய வெளியீடான துணிவுவின் முதல் நாள் வசூலை கூட முறியடிக்க முடியவில்லை. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான படம் கலவையான விமர்சனத்தை […]