பாலியல் புகார் எதிரொலி : மலையாள திரைப்பட நடிகர் சங்கம் கலைப்பு!

mohanlal

கேரளா : நடிகர் மோகன்லால் நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாகவே பேசி புகார் அளித்து வருகிறார்கள்.

குறிப்பாக, நடிகை மினு முந்நீர் கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு செய்த அநாகரீக செயலை பற்றி  வெளிப்படையாக பேசியிருந்தார். அதைப்போல, மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் கூறினார்.  நடிகை அளித்த புகாரைத் தொடர்ந்து ரஞ்சித் தன்னுடைய அகாடமி தலைமை பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அதைப்போல,  சோனியா மல்ஹார் இளம் நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகக் கூறினார். அவரை தொடர்ந்து நடிகை ரேவதி சம்பத் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார். நடிகை வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடிகர் சித்திக் நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். இதுவரை மொத்தமாக 8 நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளது, மலையாள சினிமாவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இந்த சூழலில், மலையாள நடிகரும், மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன் லால் மீது விமர்சனங்கள் வீசப்பட்டது. நடிகர் சங்க தலைவராக இருக்கும் மோகன் லாலுக்கு சித்திக் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக வெளியான புகார் எழுந்தது குறித்து தெரியாமல் இருக்குமா? எனவும், தெரிந்தும் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது ஏன்? எனவும் கேள்விகள் எழும்பியது.

இந்த சூழலில், மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்களை அடுத்து நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். குறிப்பாக, மலையாள சினிமாவின் முக்கிய அமைப்பான AMMA-வின் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அது மட்டுமின்றி,AMMA’செயற்குழு முழுமையாக கலைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மோகன்லால் உட்பட 16 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளது மேலும் மலையாள திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்