ஃபெராரியை தொடர்ந்து Porsche GT3 RS கார் வாங்கிய அஜித்.! விலை எவ்ளோ தெரியுமா?
அதிவேக கார் பிரியரான நடிகர் அஜித் குமார் ஃபெராரியை அடுத்து போர்ஷா கார் வாங்கியிருக்கிறார்.
சென்னை : நடிகர்கள் விலை உயர்ந்த கார், பைக்குகள் வாங்குவது புதிதல்ல.
அதிலும் கார் ரேஸ் மற்றும் சாகசத்தின் மீதான விருப்பத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித்.
இவர், படப்பிடிப்பு இல்லா நேரத்தில் பைக் ஓட்டுவதையோ அல்லது கார்களை ஓட்டுவதையோ ஹாபியாக வைத்திருக்கிறார். அஜித் சமீபத்தில் ஒரு புத்தம் புதிய Ferrari SF90 Stradale -ஐ வாங்கினார். அதன் விலை 9 கோடி ஆகும்.
New ferrari Car ????????❤????#VidaaMuyarchi #AjithKumar pic.twitter.com/N8PCcxZxzB
— Ajith Kumar (@AjithKumar18841) September 10, 2024
ஏற்கனவே தனது வீட்டில் ஏற்கனவே ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி, லேண்ட் ரோவர் டிஸ்கவரி, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட 6 சொகுசு கார்கள் உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் வாங்கிய ஃபெராரியை தொடர்ந்து தற்பொழுது, Porsche GT3RS இணைந்துள்ளது.
Exclusive Pics of THALA AJITH With Porsche GT3RS ????️????
Man And the Machine.,????????
#VidaaMuyarchi | #Ajithkumar pic.twitter.com/sydMXebHaD
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) September 13, 2024
துபாயில் வாங்கிய இந்த காரின் விலை ரூ. 3.51 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. GT3 RS ஆனது பார்முலா 1 ரேஸ் கார்களில் உள்ளதைப் போன்ற பின்புற இறக்கையுடன் வருகிறது. இதனிடையே, அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை தீபாவளிக்கும். குட் பேட் அக்லி படத்தை பொங்கலுக்கும் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கி உள்ள இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர். ஒருவேளை, விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசானால் குட் பேட் அக்லி கோடையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.