உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை சந்தித்த நடிகர் சைஃப் அலிகான்!
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மும்பை : சைஃப் அலிகான் நேற்று லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சைஃப் தற்போது நலமாக உள்ளார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான்.
இதில் சைஃப் அலிகானுக்கு முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது. அப்போது, ஒரு ஆட்டோ டிரைவர் சைஃப் அலிகானை லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இப்போது சைஃப் அலிகான் குணமடைந்துவிட்டதால், அவர் ஆட்டோ டிரைவர் பஜன் சிங்கை சந்திக்கிறார். இதனால் டிரைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
சரியான நேரத்திற்கு ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்று தனது உயிரை காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். சரியான நேரத்தில் சைஃப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படாமல் இருந்திருந்தால், நிலைமை மோசமாக மாறியிருக்கும்.
இதனால், மற்றவர்களுக்கும் இது போன்று உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையே, ஆட்டோ டிரைவருக்கு பரிசுத் தொகையை சைஃப் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
#SaifAliKhan thanks the auto rickshaw driver who helped him reach the hospital after the unfortunate stabbing incident.#News pic.twitter.com/cerYdGa97M
— Filmfare (@filmfare) January 22, 2025