நடிகர் கார்த்தி லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!
- “தேவ்” திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
- அடுத்ததாக “ரெமோ” பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் “தேவ்” இந்த படத்தில் ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்க் நடித்துள்ளார். இவர் நடித்த “தேவ்”படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் நடிகர் கார்த்தி தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். “தேவ்” திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி அடுத்ததாக “ரெமோ” பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் .இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்.