வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தை சுந்தர்.சி எழுதி இயக்கியுள்ளார்.

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் நடிகர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான மதகஜ ராஜ நல்ல வெற்றியை பதிவு செய்தது. 13 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது.
அதனை அடுத்து இவரது இயக்கத்தில் தயாராகியுள்ள ஒரு திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இந்த படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்கிறார். உடன் வடிவேலு முக்கிய காமெடி வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். மற்றபடி வழக்கம் போல சுந்தர் சி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிக்கிறார்கள்.
கேங்கர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. சுந்தர்.சி படத்தில் எதிர்பார்த்தது போல ஒரு காமெடி கமர்சியல் , கொஞ்சம் கிளாமர் கலந்த ஒரு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது தெரிகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி – வடிவேலு காம்போ இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இவர்களது காமெடி அதகளத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இவர்கள் கூட்டணியில் வின்னர், லண்டன், கிரி, ரெண்டு, தலைநகரம், நகரம் மறுபக்கம் ஆகிய படங்களில் காமெடி மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. கேங்கர்ஸ் திரைப்படம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.