சர்வதேச அளவில் விருது பெரும் முதல் இந்திய இசையமைப்பாளர்..!இவர்..!
விஞ்ஞானி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய்.
இவர் தற்போது தான் அதிக பொருட்செலவிலான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு டிரினிட்டி வேவ்ஸ் என்கிற மியூசிக் ஸ்டுடியோவை உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில் வில்லவன் என்கின்ற மலேசிய தமிழ் படமானது இவரது இசையில் உருவானது. இந்த படமானது அதிக பொருட்செலவில் உருவானது.அதே நேரத்தில் இந்த படமானது மலேசியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு சூப்பரான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.இவருடைய இசை ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும் அதனை நிருபிக்கும் விதமாக அவருடைய இசைக்கு சிறப்பு அங்கீகாரம் ஒன்று கிடைத்திருக்கிறது.
அது என்னவென்றால் மலேசியாவில் நடைபெறுகின்ற சினி பீஸ்ட் மலேசியா விருது 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச இசையமைப்பாளர் பட்டியலில் வில்லவன் படத்திற்காக இவரருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விருது பட்டியலில் இந்தியாவில் ஒரு இசையமைப்பாளர் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இத்தகைய பெருமையை இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் பெற்றுள்ளார்.
இந்த பெருமை வாயந்த விருதானது ஜனவரி 31 தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.தற்போது இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் ஹாலிவுட்டில் பல படங்களுக்கு எல்லாம் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.