வரலட்சுமி : நடிகை வரலட்சுமி சரத்குமார் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். நிக்கேலாய் சச்தேவ் மும்பையில், ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்த நிலையில், பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
பிரமாண்டமாக தாய்லாந்தில் நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்திருந்தார்கள். திருமணத்தை தொடர்ந்து தனது தந்தை சரத்குமார் மற்றும் கணவர் நிக்கேலாய் சச்தேவ் ஆகியோருடன் இன்று வரலட்சுமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதில் பேசிய வரலட்சுமி ” என்னுடைய திருமணத்திற்கு உங்களுடைய யாரையும் சந்திக்க முடியவில்லை. ஆனால், அதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. என் வாழ்க்கைத் துணை நிக்கோலாய் சச்தேவ்தான், ஆனால் சினிமா என்பது தான் என் உயிர். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் என்று நினைக்கிறேன்.
நான் தொடர்ந்து நடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் எப்போதும் எனக்கு ஆதரவு அளித்து, என்னைப் பற்றி நல்லதாய் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். நான் இதெல்லாம் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். குறிப்பாக நான் எப்படிப் படத்தில் நடித்தாலும், அதற்கான எந்த அளவுக்கு பாராட்டுகளை கொடுக்கவேண்டுமோ அதற்கு அதிகமாகவே நீங்கள் வழங்கியுள்ளீர்கள். இது தொடர்ந்து தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனவும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…