சின்னத்திரை சங்க தேர்தல்..மும்முனை போட்டியில் இவர்கள் எல்லாம் போட்டியாளர்கள்..!
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கான 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் ஆகும்.
அதன் படி சங்கத்தின் தலைவராக இருந்து வந்த சிவன் சீனிவாசனின் பதவி காலமானது முடிந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். மஹாலில் நேற்று தேர்தல் நடைபெற்றது.
இந்த வாக்குபதிவானது காலை 8 மணிக்கு தொடங்கியது.மாலை 5 மணிக்கு வரை நடந்து முடிந்தது.இதில் மொத்தம் 1551 ஓட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை நிரோஷா மற்றும் சிவன் சீனிவாசன் மற்றும் ரவிவர்மா மற்றும் போஸ் வெங்கட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் நடிகை நிரோஷா அணியில் பரத் சங்கத்தின்செயலாளர் பதவிக்கும், எஸ்.ஸ்ரீதர் சங்க பொருளாளர் பதவிக்கும் மற்றும் வி.டி.தினகரன்- கன்யா பாரதி உள்ளிட்டோர் துணைத்தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.மேலும் விஜய் ஆனந்த் மற்றும் ரவீந்திரன், மோனிகா, முனிஷ் ராஜா உள்ளிட்டோர் இணை செயலாளர் பதவிக்கும் போட்டியிட்டுள்ளனர்.
இதில் முன்னாள் தலைவராக இருந்த சிவன் ஸ்ரீநிவாசன் அணியில் செயலாளர் பதவிக்கு பரத் கல்யாண் துணைத்தலைவர் பதவிக்கு ராஜசேகர், மனோபாலா, பொருளாளராக ஸ்ரீவித்யா மற்றும் இணைசெயலாளராக தளபதி தினேஷ், எம்.டி. மோகன். கற்பகவல்லி மற்றும் சவால் ராம் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
இதில் மற்றொரு அணியில் உள்ள போஸ் வெங்கட் அணியில் செயலாளராக பி.கே. கமலேஷ் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு சோனியா மற்றும் எல்.ராஜா, பொருளாளர் பதவிக்கும் நவீந்தர், இணை செயலாளராக க.தேவானந்த் மற்றும் தாடி பாலாஜி, ஸ்ரத்திகா மற்றும் கே.கமலஹாசன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
14 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட இந்த பதவிக்கு 4 அணிகள் சார்பில் 56 பேர் போட்டியிள்ளனர்.மேலும் மொத்தம் 94 வேட்பாளர்கள் நேரடி களத்தில் உள்ளனர்.