நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர் ஸ்ரீதர் மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வசித்த அவருக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஹாஸ்பிடலில் சேர்த்தபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவருக்கு வயது 62. இவரது மறைவு தமிழ் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அழியாத கோலங்கள், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களிலும், தாமரை, சித்தி-2 உள்ளிட்ட டிவி தொடர்களிலும் நடித்துள்ள இவர், இயக்குநர் பாலச்சந்தரின் ‘சஹானா’ சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் சஹானா ஸ்ரீதர் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார்.
அழியாத கோலங்கள், விஐபி, ராஜவம்சம் திரைப்படங்கள் மற்றும் ஏராளமான சீரியல்கள் என வெள்ளித்திரை, சின்னத்திரையில் ஜொலித்தவர். வள்ளி வேலன், தாமரை, சித்தி-‘ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.