புராணக் கதையை இயக்கும் கிறிஸ்டோபர் நோலன்.. புதுப்படம் டைட்டில் ரிலீஸ்.!

'ஓப்பன் ஹெய்மர்' உள்பட பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் அடுத்ததாக ஹோமரின் காவியக் கதையான 'தி ஒடிஸி'யை இயக்குகிறார்.

Christopher Nolan - Odyssey

அமெரிக்கா: ஹாலிவுட் திரையுலகில் ‘ஓப்பன்ஹெய்மர்’ உள்பட பல ஹாலிவுட் படங்களை இயக்கிய இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், அடுத்ததாக ஹோமரின் காவியக் கதையான “தி ஒடிஸி”-யை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிரேக்க புராணத்தை தழுவி எடுக்கப்படும் இப்படம் 2026 ஜூலை 17ல் உலகம் முழுவதும் வெளியாகும் எனவும் ’தி ஒடிஸி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமரின் புராணக் கதை IMAX திரைகளுக்கு வருவது இதுவே முதல் முறை.

ஆம், இத்திரைப்படம் “புத்தம் புதிய IMAX திரைப்பட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஒரு புராண அதிரடி காவியமாக” இருக்கும் என்று ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோலனின் இந்த படத்தில், நடிகர்கள் மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா, ராபர்ட் பாட்டின்சன், லூபிடா நியோங்கோ மற்றும் சார்லிஸ் தெரோன் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்படும் என்றும், நோலனின் ஓப்பன்ஹைமருக்குப் பிறகு, தயாரிப்பு நிறுவனமான யுனிவர்சல் ஸ்டுடியோஸுடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.

இதற்கு முன்னதாக, நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் அணு ஆயுதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படம் 96-வது ஆஸ்கர் விருது விழாவில், 7 விருதுகளை வென்று அசத்தியது. இதனால், ஒடிஸி புராண கதையை கையில் எடுத்திருக்கும் நிலையில், எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது.

ஒடிஸி

ஹோமர் என்கிற கிரேக்கப் கவிஞரால் எழுதப்பட்ட ‘ஒடிஸி’ பண்டையகால கிரேக்க புராணங்களில் ஒன்றாகும். இது கி.மு 900 ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த புராணம் ‘ஒடிஸியஸ்’ என்னும் மாவீரன் பற்றியது. இந்த ஒடிஸி புராணம் இத்தாக்காவின் மன்னரான ஒடிஸியஸின் கதையையும், ட்ரோஜன் போருக்குப் பிறகு அவரது ஆபத்தான பயணத்தையும் எடுத்துரைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்