Disco Shanti : சிரிச்சிட்டா போதும் ஜொள்ளு விடுவாங்க! கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி சொன்ன சீக்ரெட்!
ஒரு காலகட்டத்தில் டிஸ்கோ சாந்தி என்ற பெயர் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய கவர்ச்சி நடனத்தால் மிகவும் பிரபலமானவர் அவர். வெள்ளை மனசு எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். உதய கீதம், சாவி, சிதம்பர ரகசியம், ராஜ மரியாதை, பாசம் ஒரு வேசம், உரிமை கீதம், மணமகளே வா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அந்த சமயம் இவருடைய நடனத்தை பார்க்கவே பலரும் படங்களை பார்க்க திரையரங்குகளுக்கு சென்றுள்ளார்கள். அந்த அளவிற்கு இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்றே கூறலாம். பொதுவாகவே இப்படி கவர்ச்சியாக நடித்தால் அந்த நடிகைகள் மீது எதாவது ஒரு முறையாவது கிசு கிசு வந்துவிடும்.
ஆனால், இதுவரை ஒருமுறை கூட டிஸ்கோ சாந்தி மீது கிசு கிசுவே வந்தது இல்லையாம். படத்தில் கவர்ச்சியாக நடிப்பதோடு நிறுத்துக்கொண்டுவிடுவாராம். மற்றபடி, படப்பிடிப்பில் இயக்குனர்களிடம் சிரித்து பேசுவது, நடிகர்களுடன் சிரித்து பேசுவது என ஜாலியாக எல்லாம் இருக்கமாட்டாராம்.
ஒரு முறை பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் டிஸ்கோ சாந்தியிடம் நீங்கள் கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் எதற்காக யாரிடமும் சிறிதுகூட பேசமாட்டிகிறீர்கள் என கேட்டாராம். அதற்கு பதில் அளித்த டிஸ்கோ சாந்தி நான் சிரித்து பேசினால் எல்லாரும் என்னை பார்த்து ஜொள்ளு விடுவாங்க. பிறகு என்னை பற்றி கிசு கிசு வரும் அது எனக்கு பிடிக்காது என கூறிவிட்டாராம்.
என்னைப்பொறுத்தவரை சினிமாவில் நடிக்க வந்தோமா கவர்ச்சி நடனம் ஆடினோமா போனோமா என்று இருக்கவேண்டும். என்னிடம் இயக்குனர்கள் கதை கூறுவார்கள் கவர்ச்சி நடனம் ஆடும்போது நடன இயக்குனர்கள் நடனம் சொல்லிக்கொடுப்பார்கள் அதனை பின்பற்றி நான் ஆடுகிறேன். பல தயாரிப்பாளர்கள் என்னிடம் பேசிய பணத்தை விட குறைவான சம்பளத்தை தான் கொடுத்து இருக்கிறார்கள்.
அதையெல்லாம் நான் அவர்களிடம் எனக்கு இவ்வளவு சம்பளம் பேசிவிட்டு குறைவான சம்பளம் கொடுக்கிறீர்கள் என்று கேட்டதே இல்லை. அதனால் தான் நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு கிசு கிசு வருவது சுத்தமாக பிடிக்காது எனவும் டிஸ்கோ சாந்தி கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் நடிப்பது மட்டும் தான் கவர்ச்சி மனசு முழுக்க டிஸ்கோ சாந்திக்கு தங்கம் தான் என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.