30 ஆண்டுகள் கழித்து அஜித்குமார் உடன் சந்திப்பு! நினைவுகளைப் பகிர்ந்த நடிகர் சிரஞ்சீவி.!

Ajith Kumar - Chiranjeevi

ஹைதராபாத் : குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியை, நடிகர் அஜித் குமார் சந்திக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘விஷ்வம்பரா’ படப்பிடிப்பும் அதே இடத்தில் நடந்து வந்த நிலையில், அஜித் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாளையுடன் நிறைவடைகிறது. 

அஜித்துடனான சந்திப்பை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட மெகாஸ்டார், “நேற்று மாலை ‘விஸ்வம்பரா’ செட்டிற்கு சர்ப்ரைஸாக அஜித்குமார் வந்திருந்தார். இருவரும் சிறிது நேரம் அரட்டை அடித்தோம். அவரது முதல் தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் காலத்தை நினைவு கூர்ந்தோம்.

பல ஆண்டுகளாக அஜித் அடைந்திருக்கும் இந்த அபரிதமான வளர்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்மேலும் என்னவென்றால், ஷாலினி என் ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி படத்தி அன்பான குழந்தைகளில் ஒருவராக நடித்தார். ரசிக்க ஏராளமான நினைவுகள் இருந்தன என்பது தெளிவாகிறது. ” என்று கூறிஉள்ளார் 

30 வருடங்களுக்கு முன்

30 வருடங்களுக்கு முன் அஜித்தின் முதல் தெலுங்கு படமான “பிரேம புஸ்தகம்” என்கிற திரைப்படம் 1992ல் வெளிவந்தது. அப்பொழுது இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதே நேரத்தில் அஜித்துடன் சிரஞ்சீவி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்பொழுதும் இப்பொழுதும் சரி, இருவரும் ஒரே மாதிரியான பிணைப்பை கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்