சிறகடிக்க ஆசை சீரியல்.. கிரிஷின் முழு விபரத்தையும் அறிந்து கொண்ட மனோஜ் ..!விறுவிறுப்பான காட்சிகள்..

Published by
K Palaniammal

சிறகடிக்க ஆசை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 3] கதைக்களத்தை இந்த பதிவில் அறியலாம் .

ரோகினியோட அம்மா முத்து மீனா கிட்ட நடந்தத சொல்லிட்டு இருக்காங்க. இப்ப முத்து சொல்லுறாரு  நீங்களும் அந்த வயசானவரும் பண்ணுனது தப்புமா ஆனாலும் உங்க பொண்ணு அவங்க பெத்த புள்ளைய ஒதுக்கி வைக்கிறது ரொம்ப தப்புன்னு சொல்றாங்க. இத ரோகினையும் நின்னு கேட்டுட்டு இருக்காங்க. ரோகினி ஓட அம்மா சொல்றாங்க இப்பதான்பா அவ கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறிட்டு இருக்கா ஒரு நாள் அவளே வந்து க்ரிஷ  கூப்பிட்டு போய்ருவா எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு அப்படின்னு சொல்றாங்க. முத்து  சரின்னு  வாங்க கேக் வெட்டலான்னு க்ரிஷ  தூக்கிட்டு போறாங்க. கிரிஷ்  ரோகிணியை பார்த்துட்டு இருக்கிறான்.

என்ன கிரிஷ் அங்கே பார்த்துட்டு இருக்க கேக்  வெட்டு அப்படின்னு சொல்றாங்க. கிரிஷும் கேக் வெட்டி எல்லாருக்கும் ஊட்டி விடுறாரு. நீ ஏண்டா எதுவுமே பேச மாட்டேங்குற இன்னைக்கு  நீ சந்தோஷமா இருக்கணும் அப்படின்னு முத்து  கிச்சுகிச்சு  முட்டி சிரிக்க வைக்கிறார். ரோகினி ஓட அம்மாவுக்கு ரோகினி கால் பண்ணி சீக்கிரமா அவங்கள  வெளியில அனுப்பு அப்படின்றாங்க. ஆனா முத்துவும் மீனாவும் அவங்களே கிளம்பலாம் என்று முடிவு பண்றாங்க. அவங்க கிளம்பினதும் ரோகிணி உள்ள வராங்க. கிரிஷ்  வேகமா வந்து கட்டி புடிச்சுக்கிறான். ரோகினி அவங்க அம்மாவ திட்ட ஆரம்பிக்கிறாங்க எத்தனை நாளா இந்த திட்டம் போட்டு வச்சிருந்தா என் லைஃப கெடுக்கலாம்னு  நினைக்கிறியா ,

அது இல்ல கல்யாணி எத்தனை நாள் தான் நானும் சமாளிக்கிறது உன்னோட போன் நம்பர் கேட்டாங்க அதனால தான்னு  சொல்றாங்க .முத்துவும் மீனாவும் கார்ல போயிட்டு இருக்காங்க. முத்து மீனா கிட்ட ஏன் அமைதியா வர்ற அப்படின்னு கேக்குறாரு.கிரிஷ பத்தி தாங்க யோசிக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க. நாம  அவன தத்து எடுத்துக்கலாமா அப்படின்னு கேக்குறாங்க. உடனே முத்து ஷாக் ஆகி கார நிறுத்திடுறாரு. என் அருமை பொண்டாட்டி நானும் அதைத்தான் நினைச்சேன் அப்படின்னு சொல்றாரு. இப்ப மீனா ஒரு கோவிலுக்கு கூப்பிட்டு போயி சீட்டு எழுதி போட்டு பார்க்கிறாங்க. அதுல தத்து எடுக்க வேணாம்னு வருது.

இத பாத்துட்டு முத்து இதெல்லாம் நீ ஏன் பண்ற நல்லது பண்றதுக்கு  எப்பவுமே யோசிக்க கூடாது .இனிமே நான் சொல்றத மட்டும் நீ கேட்டா போதும் அப்படின்னு கூப்பிட்டு போறாரு. விஜயாவோட டான்ஸ் கிளாஸ்ல நிறைய பேர் வந்து சேர்ந்து இருக்காங்க. இத பாத்துட்டு விஜயா  பார்வதிக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு. இன்னைக்கு இவ்வளவு பேர் வந்திருக்காங்க இன்னும் நாளைக்கு இதைவிட அதிகமா கூட வரும் போல .இதுக்கு அப்புறம் தாளமும் ராகமும் தான் இருக்கப் போகுது. என் வாழ்க்கையும் பிரகாசமாயிரும் அப்படின்னு சந்தோசமா இருக்காங்க. அதோட இன்னைக்கு ஒரு எபிசோடு முடியுது.

நாளைக்கு ஆனா ப்ரோமோல மீனா கிரிஷ்வோட நிலைமையை பத்தி வீட்ல பேசிட்டு இருக்காங்க .ரோகினி வீட்டுக்குள்ள என்ட்ரி ஆகுறாங்க. அப்போ தனக்கு பையன் இருக்கிறத அந்த பொண்ணு சொல்லவே இல்ல.  இப்படி இருந்தா எவனையாச்சும் ஏமாத்தி கல்யாணம் கூட பண்ணிக்கிறோம் போல. எந்த கேனையன்  ஏமாற போறானோ  தெரியல அப்படின்னு மனோஜ்  சொல்றாரு .தான்தான் அந்த கேணையைன்னு என்னைக்கு தெரிய வரப்போகுதுன்னு தெரியல பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
K Palaniammal

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

2 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

4 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

5 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

6 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

7 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

7 hours ago