சிறகடிக்க ஆசை சீரியல் -மனோஜ் தன்னயே திட்டுக்கொள்ளும் அருமையான காட்சிகள்..!

muthu, manoj

சிறகடிக்க ஆசை இன்று -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 6] விறுவிறுப்பான காட்சிகளை இங்கே  காணலாம்.

மனோஜ் சொல்லிட்டு இருக்காரு அந்த பொண்ணு தனக்கு குழந்தை இருக்கிறதையே சொல்லாம இருக்கா கண்டிப்பா எவனையோ ஏமாத்தி கல்யாணம் கூட பண்ணிப்பா எந்த கேனையை ஏமாற போறானோ தெரியல அப்படின்னு சொல்றாரு. விஜயாவும் சொல்றாங்க இந்த மாதிரி பொண்ணுங்களா அந்த குடும்பத்தையே ஒரு வழி பண்ணிடுவாங்க.. அதுக்கு சுருதி சொல்றாங்க எல்லா பொண்ணுங்களும் அப்படி இல்லை ஆன்ட்டி. அண்ணாமலை சொல்றாரு அந்த பையன நெனச்சா ரொம்ப கவலையா இருக்கு. இந்த டைம்ல முத்து சொல்றாரு நாங்க க்ரிஷ  தத்து எடுக்கலாம்னு  இருக்கிறோம் அப்பா.. எனது தத்தெடுக்க போறீங்களா அப்படின்னு விஜயா  அதிர்ச்சியா கேக்குறாங்க.

ஆமா அவங்க பாட்டிக்கு அப்புறம் அவனுக்கு யாருமே இல்ல அவனுக்கு நாங்க நல்ல வாழ்க்கை கொடுக்கலாம்னு இருக்கிறோம் அப்படின்னு சொல்றாங்க. அண்ணாமலையும் ரவியும் இது நல்ல விஷயம்தான் அப்படின்னு சொல்றாங்க .விஜயா மட்டும் இது என்ன ஆசிரமமா.  அதெல்லாம் முடியாது பாவம் பார்த்தால் காசு துணி ஏதாவது குடுங்க வீட்டுக்கு எல்லாம் கூப்பிட்டு வரக்கூடாது. பெத்தவளுக்கே இல்லாத அக்கறை உங்களுக்கு என்ன இது என் வீடு அப்படின்னு சொல்லுறாங்க . இது எல்லாத்தையுமே கேட்டுவிட்டு ரோகிணி உள்ள வராங்க. என்னாச்சு ஆன்ட்டி அப்படின்னு கேக்குறாங்க. வாமா நீதான்  வீட்டுக்கு மூத்த மருமக நீ சொல்லுமா இவங்க அந்த கை உடைந்து போய் வந்திருந்தால் அந்த பையனை தத்தெடுக்க போறாங்களாமா.

muthu ,annamalai (1)

 

இத கேட்டு ரோகிணி எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்காங்க . ஆனால் மனோஜ் சொல்றாரு அவன் இங்க கொண்டாந்து வளர்த்து எதையாச்சும் திருடிட்டு போயிட்டான்னா என்ன பண்றது அப்படின்னு சொல்லவும் அதுக்கு வேகமா முத்து எல்லாருமே உன்னை மாதிரி இருப்பாங்களாடா அப்படின்னு சொல்றாரு. அப்பாவும் க்ரிஷோட   பாட்டியும் சரின்னு சொல்லிட்டா அது எங்க பையன் இங்கதான் இருப்பான் அப்படின்னு முத்து  சொல்லிடுறாரு. அதுக்கு அண்ணாமலை சொல்றாரு அந்த பையன் இந்த வீட்டுக்கு தான் வரணும்னு இருந்தா கடவுள் கண்டிப்பாக கொண்டுவந்துருவாரு . ரோகினி ஓட அம்மாவுக்கு ரோகிணி கால் பண்றாங்க மீனா தத்தெடுக்க போற விஷயத்தை சொல்லவும் அவங்க சந்தோஷப்படுறாங்க.

அப்போ க்ரிஷ்  உன் பக்கத்துல இருப்பான் கல்யாணி.. என்னமா விளையாடுறியா அவங்களுக்கு என் பையன தத்து குடுக்க சொல்றியா ஏதாவது சொல்லிட போறேன் நீ அவங்க கால் பண்ணா எடுக்காத அப்படின்னு சொல்லிடறாங்க. அந்த டைம்ல மீனாவும் கால் பண்றாங்க ஆனா க்ரிஷோட பாட்டி எடுக்கவே இல்ல. க்ரிஷ்  யாருன்னு கேக்குறாரு.. மீனா கால் பண்றங்கப்பா நீ அவ கூட பேசினா உங்க அம்மா கோவிச்சுக்குவா அதனால இனிமேல் நம்ம பேச வேண்டாம் அப்படின்னு சொல்லுறாங்க.. ஏன் பாட்டி அவங்க நம்ம மேல பாசமா தானே இருக்கிறாங்க. இப்ப சொன்னா உனக்கு புரியாதுப்பா . இப்போ வித்யா ரோகினி கிட்ட போன ஜென்மத்துல நீ பொம்பள அரிச்சந்திரனா இருந்து இருப்ப போல டி.

seetha (1)

இவ்வளவு பொய் சொல்லியும் மாட்டாம இருக்குற எவ்வளவு நாள் கிரிஷ் பத்தி சொல்லாம இருக்க போற அப்படின்னு கேட்கவும், ரோகிணி சொல்றாங்க அம்மாவையும் க்ரிஷயும்  சென்னைக்கு வர வைக்க போறேன்.. நீயே  உன் பிள்ளையை வளர்த்திருந்தா ஏன் தத்து கேட்க போறாங்க அப்படின்னு வித்தியா சொல்றாங்க.. மனோஜ்க்கும் எனக்கும் ஒரு குழந்தை பிறந்துட்டா எல்லா பிரச்சினையும் சரியாயிடும் அப்படின்னு ரோகினி சொல்றாங்க. இப்போ சீதா மீனாவுக்கு கால் பண்ணி அக்கா நான் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆயிட்டேன்னு சொல்றாங்க. மீனா ஆனந்த கண்ணீர் வடிக்கிறாங்க  இதை பார்த்த முத்து என் அழுகிற அப்படின்னு கேட்கவும்  சீதா சொல்றாங்க நான் பாஸ் பண்ணிட்டேன் மாமா .

முத்துவும் சொல்றாரு ரொம்ப சந்தோசமா இருக்குதுடா படிக்காதவங்களுக்கு தான் படிப்போட அருமை தெரியும் அப்படின்னு சொல்றாரு. சரி மாமா நீங்க அக்காவை கூப்பிட்டு வீட்டுக்கு வரீங்களான்னு கேக்குறாங்க. அதுக்கு முத்துவும்  வந்துட்டா போச்சு இதோ வரேன் அப்படின்னு சொல்றாங்க .மீனா முத்துவை  கட்டிபிடிச்சுட்டு ஆனந்த கண்ணீர் வடிக்கிறாங்க இதோட இன்னைக்கு  எபிசோடு முடிந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested