சிறகடிக்க ஆசை சீரியல்.. அண்ணாமலை எடுக்கும் அதிரடியான முடிவு..!

siragadikka asai 18

சிறகடிக்க ஆசை சீரியல்.. சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஜூலை 18] கதைக்களத்தை இங்கே காணலாம்.

முத்து மனோஜ் கிட்ட ஒழுங்கா உண்மையை ஒத்துக்கோ அப்படின்னு சொல்றாரு.. மனோஜ் என்ன கேட்டா எனக்கு என்ன தெரியும் அப்படின்னு சொல்றாரு..  ரவி அந்த நாலு லட்சம் பணம் உனக்கு எப்படி வந்துச்சுன்னு கேக்குறாரு.. அது என்னோட பிரண்டு கிட்ட வாங்கினேன் அப்படின்னு சொல்லிறாரு. இப்போ முத்து அண்ணாமலை கிட்ட அப்பா இவன் எந்த பிரண்டு கிட்டயும் வாங்கல நான் போய் நேர்ல போய் பார்த்து கேட்டேன் இப்பவே மனோஜ கால் பண்ண சொல்லுங்க அப்படின்னு சொல்லவும் மனோஜ் தயங்குறாரு..

ஒரு கட்டத்துல மனோஜ் அண்ணாமலை கிட்ட உண்மையை சொல்லிடுறாரு அப்பா இந்த மாதிரி நான் ஏமாந்துட்டேன் டீலர்க்கு வேற பணம் கொடுக்க வேண்டியது இருந்துச்சு வேற வழி தெரியல அதான் அம்மா கிட்ட கேட்டேன் மீனாவோட நக இருக்குதுன்னு சொன்னாங்க நான் அடமானத்துக்கு வைக்கலாம்னு தான் நினைச்சேன் ஆனா பணம் பத்தல அதான் பா வித்துட்டேன் அப்படின்னு சொல்றாங்க .இத கேட்டா சுருதி எங்களுக்கு அப்பவே சந்தேகம் இருந்துச்சு நான் தான் வாய்ஸ் கால் மாத்தி பேசினேன் ஆனா நீங்க மாட்டல ஆனா சின்ன எலுமிச்சம்பழத்தில் மாட்டிட்டிங்க இது சீட்டிங் தெரியலையா அப்படின்னு கேக்குறாங்க.

muthu annamalai

உடனே முத்து இவனுக்கு இதெல்லாம் கைவந்த கலை. இப்ப மீனாவும் சொல்றாங்க அத்தை இது உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சது தானே ஆனா நீங்க என் வீட்டுல உள்ளவங்களையும் தப்பா பேசினீங்க இது எந்த விதத்தில் நியாயம் அப்படின்னு கேக்குறாங்க. இப்போ அண்ணாமலை மனோஜ்க்கு பலார்னு அறைய விடுறாரு. விஜயா சொல்றாங்க விட்ருங்க உடனே அண்ணாமலை சொல்றாரு ஏ நீ வாயை மூடு நீ எல்லாம் ஒரு பொம்பளையா  இப்படி வளர்த்து வைத்திருக்கிறாயே..முத்துவும் அடிக்கிறாரு  .

உடனே ரோகிணி ஏன்   ஆளாளுக்கு  அடிக்கிறீங்க அவரை அப்படின்னு கேக்குறாங்க .அதுக்கு அண்ணாமலை சொல்றாரு ஏம்மா அவ தான் பெத்த பிள்ளைனு  சப்போர்ட் பண்ற நீ ஏம்மா அவனுக்கு சப்போர்ட் பண்றேன்னு கேக்குறாங்க அது இல்ல அங்கிள் அப்படின்னு சொல்றாங்க.. இப்ப சுருதி ரோகிணி உங்களுக்கு இது முன்னாடியே தெரியுமா .. ஆமா எனக்கு ஒரு நாள் முன்னாடி தான் தெரியும் இவர் இப்படி பண்ணுவார் என்று தெரிந்திருந்தால் நான் பண்ண வேண்டாம்னு சொல்லி இருப்பேன். அந்த நகையை நான் திருப்பி தந்துடுறேன் .

இப்ப விஜயா மீனாவை  பார்த்து ஏய் நீ என்ன அந்த நகைக்கு உரிமை  கொண்டாடுற .உடனே அண்ணாமலை சொல்லுறாரு  வாய மூடு நீ எல்லாம் ஒரு பொம்பளையா நல்லவ மாதிரி வேஷம் போட்டு உன் பிள்ளைக்காக நீ எது வேணாலும் பண்ணுவ உன்கிட்ட இனிமேல் நான் பேசவும் மாட்டேன் ஒரு சொட்டு தண்ணி கூட வாங்கி குடிக்க  மாட்டேன்  அப்படின்னு சொல்லிடுறாரு. என்னங்க நம்ம புள்ள தானே அப்படின்னு விஜய சொல்றாங்க  கண்டவங்க முன்னாடி என்னைய இப்படி பேசுறீங்க அப்படின்னு கோவமா போயி ரூம் சாத்திக்கிறாங்க..

muthu ,manoj (1)

ரோகிணி மனோஜ  என்ன ஆச்சுன்னு பாரு  மனோஜ் அப்படின்னு சொல்றாங்க.. மனோஜ் அம்மா அம்மான்னு கூப்பிடுறாங்க அவங்க பேசவே இல்ல. முத்துவும் மீனாவும் அண்ணாமலை கிட்ட அப்பா போய் பேசுப்பா போய் கூப்பிடுப்பா என்ன ஆச்சுன்னு பார்ப்பான்னு சொல்றாங்க அண்ணாமலை அதெல்லாம் என்னால முடியாதுன்னு சொல்றாங்க. இதோட இன்னைக்கு  எபிசோட் முடிந்தது .

நாளைக்கு ஆனா ப்ரோமோல முத்து சொல்லுறாரு மீனா கிட்ட அம்மா மன்னிப்பு கேட்டே ஆகணும்னு சொல்றாங்க அதுக்கு மனோஜ்  சொல்றாரு அம்மா ஏண்டா மன்னிப்பு கேட்கணும்  அப்போ நீ மன்னிப்பு கேளு உன்னால தான எல்லாம்னு முது சொல்லுவாரு  அப்படி எல்லாம் நான் கேட்க முடியாது டா அப்படின்னு  மனோஜ் சொல்றாரு. அதோட முடிச்சிருக்காங்க நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு பாக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்