கோட் அப்டேட் ! விஜய் – பவதாரிணி குரலில் வெளியானது ‘சின்ன சின்ன கண்கள்’!!

goat vijay movie china china

கோட் :  இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூன் 22) விஜயின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அப்டேட்டுகளை வாரி வழங்கி வருகிறது.

அந்த வகையில், ஏற்கனவே, இன்று நள்ளிரவு 12.1 மணிக்கு கோட் படத்தில் இருந்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியீட்டு விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது. அத்துடன், படத்தில் விஜய் மற்றும் மறைந்த பாடகி வாதாரிணியின் குரல் AI மூலம் வைத்து உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள் பாடல் ‘ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் முன்னதாக, அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அருமையாக இசையமைத்து இருக்கும் அந்த ‘சின்ன சின்ன கண்கள் பாடல் ‘ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. பாடலில் வரும் இசையும், விஜய் மற்றும் மறைந்த பாடகி வாதாரிணியின் குரல் நம்மளை எங்கேயோ கொண்டு செல்கிறது. அந்த அளவிற்கு அருமையாக இருக்கிறது என பாடலை கேட்டவர்கள் கூறி வருகிறார்கள். இதோ அந்த பாடல்…

ஏற்கனவே, இயக்குனர் வெங்கட் பிரபு “என் இதயத்திற்கு மிக நெருக்கமான இந்தப் பாடல், இன்று மாலை முதல் உங்கள் இதயத்திற்கும் நெருக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்! பவதாவின் நீங்கா நினைவின் குரலோடு விஜய்யண்ணாவின் குரலும் இணையும் சின்னசின்னகண்கள் ” என்று கூறியிருந்தார். அவர் கூறியது போலவே, இந்த பாடல் பலருக்கும் பிடித்த பாடலாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த கோட் படத்தில் மீனாட்சி சௌத்ரி, ஸ்னேகா, லைலா, மாளவிகா சர்மா, மோகன், அஜ்மல் அமீர், பிரபுதேவா, யோகி பாபு, வத்வா கணேஷ், பிரேம் ஜி, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
jos buttler
ragupathy dmk thiruparankundram
Subman Gill - Abhishek sharma
Australian - Pat Cummins
TVK Leader Vijay - TVK Secretary Anand (Innner)
Meet Akash Bobba