துணிவு படத்தின் “சில்லா சில்லா” பாடல் வெளியீடு..! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.!

Published by
பால முருகன்

நடிகர் அஜித் நடித்து வரும் “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ChillaChillaFromToday
ChillaChillaFromToday [Image Source: Twitter ]

இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில். இதனை முன்னிட்டு  படத்தின் முதல் பாடலான “சில்லா சில்லா” பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டியிருந்தது. அதன்படி, தற்போது அந்த பாடலை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை ராக்ஸ்டார் அனிருத் பாடியிருக்கிறார். பாடலை வைசாக் என்பவர் எழுதியுள்ளார்.

ChillaChilla From Thunivu [Image Source: Twitter ]

பாடலை கேட்கையில், பாடலில் வரும் பீட் மற்றும் வரிகள் அனைத்தும் நம்மளை இதற்கு முன்பே வெளியான “ஆலுமா டோலுமா” பாடலின் நினைப்பிற்கு கொண்டு சென்றுள்ளது. அந்த அளவிற்கு சூப்பரான குத்து பாடலை ஜிப்ரான் அஜித்துக்காக கொடுத்துள்ளார். இது தான் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு 50-வது படமும்.

இதையும் படியுங்களேன்- படுக்கைக்கு அழைத்தால் நான் இதைத்தான் செய்வேன்.! ரெம்ப ஓப்பனாக பேசிய கீர்த்தி சுரேஷ்.!

PartyWithChillaChilla [Image Source: Twitter ]

மேலும், இன்று “துணிவு” படத்தின் பாடல் தான் வெளியாகியுள்ளது. ஆனால், அஜித் ரசிகர்கள் துணிவு படமே வெளியானது போல திரையரங்குகளில் டிக்கெட் எடுத்து மேளம் அடித்து நடனமாடி கொண்டாடி வருகிறார்கள். அப்போ கண்டிப்பாக படம் வெளியாகும் சமயத்தில் எந்த அளவிற்கு கொண்டாட்டம் இருக்கும் என்பதை யோசிக்கவே முடியவில்லை. மேலும் இன்று வெளியான இந்த சில்லா சில்லா பாடல் என்ன சாதனையெல்லாம் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

18 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

30 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

42 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

48 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago