ஹிந்தியில் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வரும் சன்னி லியோன் தமிழில் வடகறி படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். இதனையடுத்து , தற்போது திகில் கலந்த படமான “ஓ மை கோஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து, நவரச நாயகன் கார்த்திக் நடித்து வரும் “தீ இவன்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் அவருடன் சேர்ந்து நடிகை சன்னிலியோன் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். அந்த பாடலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டிகொடுத்த சன்னிலியோன் படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது குழந்தைகள் இருந்தால், படப்பிடிப்பையே நிறுத்திவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் படங்களில் இடம்பெற்றிருக்கும் குத்துப்பாடல்களில் கவர்ச்சியாக ஆடி வருகிறேன். என்னை பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது.
இதையும் படியுங்களேன்- என் முன்னாடி கடவுள் வந்தா.. “இதை கேட்பேன்”.. நீங்க என்ன கேப்பிங்க? விஜய் ஆண்டனி கேள்வி.!
அது என்னவென்றால், படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது அங்கு குழந்தைகள் இருக்கக்கூடாது. அப்படி எதாவது குழந்தைகள் இருந்தால் நானே சொல்லி படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…