மேடையில் பி.சுசீலாவின் ரசிகராக மாறிய முதல்வர் மு.கஸ்டாலின்.! பாடல் பாடி அசத்தல்…

Susheela -CM Stalin

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின்  இரண்டாம் பட்டமளிப்பு விழா, இன்று காலை (21.11.2023) வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்றது. மேலும், இந்த விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்ளும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பாடகி சுசீலாவின் இருக்கைக்கே சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார். பட்டமளிப்பு முடிந்த பின் மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், பாடகி பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது என்று கூறிஉள்ளார்.

த்ரிஷா நல்ல நடிகை! நான் ஒன்னும் தண்ணி அடிச்சிட்டு பீச்சுல ஆடல..மன்சூர் அலிகான் பரபரப்பு!

தொடர்ந்து பேசிய முதல்வர், நான் பி.சுசிலாவின் ரசிகர் இதனை இந்த மேடைக்கு வந்தவுடன் அவரிடம் வெளிப்படையாகவே கூறினேன். நான் காரில் இரவு நேரங்களில் பயணிக்கும் போது, அதிகமாக சுசிலாவின் பாடல்களை கேட்பேன் என்று கூறிவிட்டு, “நீ இல்லாத உலகில் நிம்மதி இல்லை” எனும் பி.சுசிலாவின் பாடலை மேடையிலேயே பாட்டி பாடினார் மு.க.ஸ்டாலின். இதனை கேட்டு அரங்குகள் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அட இந்த நடிகரா இவர்!

பி.சுசீலா

முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகியான பி.சுசீலா, ‘இசைக்குயில்’ என்றும் ‘மெல்லிசை அரசி’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். பல மெல்லிசை பாடல்களை வழங்கிய பலரது மனதிலும் இடம் பிடித்த பி.சுசிலா, இசையரசி எனவும் அழைக்கப்படுகிறார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்