வித்தியாசமான கதாபத்திரத்தில் களமிறங்கும் சேரன்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் தற்போது இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில், ராஜாவுக்கு செக் என்ற படத்தில் சேரன் நடித்து வருகிறார். இப்படத்தில் சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குனர் சாய் ராஜ்குமார் அவர்கள் கூறுகையில், இப்படத்தில் சேரன் ‘க்ளைன் லிவிங் சிண்ட்ரோ’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். எந்த நேரத்திலும் அவர் தூங்கி விடுவார். இந்த தூக்கம் பல மணி நேரம், பல நாள், பல வாரங்கள் கூட நீடிக்கும். இந்த குறைபாடு உள்ள கேரக்டரில் உலகில் எந்த சினிமாவிலும் வந்ததில்லை. முதன் முதலாக இதனை தமிழ் படத்தில் கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025