cheran Gnanavel Raja ameer [file image]
அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டும் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்த பாடு இல்லை. ஏனென்றால், சரியாக மன்னிப்பு கேட்டு ஞானவேல் ராஜா அறிக்கை விடாத காரணத்தால் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் ஆவேசமாக அறிக்கையை வெளியீட்டு இருந்தார்கள்.
எனவே, இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இன்னுமே பலரும் அமீருக்கு ஆதரவாக பேசி அறிக்கையை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது இயக்குனர் சேரன் அமீருக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார். அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…. காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே..
வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!
திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும் .. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும். ஞானவேல் ராஜா படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள் அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்கவேண்டும்.” என சேரன் தெரிவித்துள்ளார். மேலும், பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தது அந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அமீர் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள்.
பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் பருத்திவீரன் படத்தை ரிலீஸ் செய்த போது தான் படாதா பாடு பட்டதாகவும், எனக்கு எதிராக ஞானவேல் ராஜா மற்றும் அவருடைய தரப்பில் சிலர் இருந்ததாக கூறியிருந்தார்.அவரை தொடர்ந்து அடுத்ததாக ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா ” அமீர் என்னை கணக்கு விஷயத்தில் ஏமாற்றி விட்டார் அவர் தான் எங்களுக்கு துரோகம் செய்தவர்.
அந்த சமயம் எனக்கு சினிமாவை பற்றி அந்த அளவிற்கு எதுவும் தெரியாது என்பதால் கணக்கு விஷயத்தில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்கவேண்டும் அவர் அப்படி சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” என கடுமையாக தாக்கி திருடன் என அமீரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதன் காரணமாக தான் இந்த விவகாரம் இந்த அளவிற்கு பெரிதாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…