சென்னையில் இன்று முதல் 21வது சர்வதேச திரைப்பட விழா!

Chennai Film Festival

21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 57 நாடுகளை சேர்ந்த 126 திரைப்படங்கள் சத்யம் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. இதில், மாமன்னன், அநீதி, அயோத்தி, போர் தொழில், செம்பி, விடுதலை-1 உள்ளிட்ட 12 தமிழ் படங்களும் இதில் திரையிடப்பட உள்ளது.

இதற்கு கட்டணமாக மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PVR INOX உடன் இணைந்து (ICAF) ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில் சாத்தியமான படங்கள் உட்பட பாராட்டப்பட்ட படங்கள் இடம்பெறும். தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை திருவிழா நடைபெறுகிறது.

உலக சினிமா பிரிவில் வியட்நாம், ஜோர்டான், சவுதி அரேபியா, கத்தார், தஜிகிஸ்தான், பனாமா, மங்கோலியா, கஜகஸ்தான், ரீயூனியன், உருகுவே, மாசிடோனியா, மற்றும் திபெத் போன்ற நாடுகளின் திரைப்படங்களை இந்த விழாவில் அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்க்க போறேன்! ஹாலிவுட் நடிகர் க்ளின்ட் ஈஸ்ட்வுட்!

தொடக்கப் படமாக ஜஸ்டின் ட்ரைட்டின் அனாடமி ஆஃப் எ ஃபால் அல்லது விம் வெண்டர்ஸின் பெர்பெக்ட் டேஸ் படம் திரையிடப்படவுள்ளது. சிறந்த படமாக தேர்வு செய்யப்படும் முதல் 3 தமிழ் படங்களுக்கு தலா ரூ.7 லட்சம் பரிசு அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்