என்னால் முடிந்தது 2 லட்சம்…200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிதியுதவி செய்த KPY பாலா.!
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக நடிகர்கள் பாலா மற்றும் அமுதவாணன் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து KPY பாலா பேசுகையில், “2015-ல் வெள்ளம் வந்தபோது உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது என்னிடம் பணம் இல்லை. நேற்று ATM எதுவம் செயல்படவில்லை. என்கிட்ட இருந்ததே 2.25 லட்சம் தான். அதுல எனக்காக 25,000 எடுத்து வெச்சிட்டு, மீதி 2 லட்சத்தை தலா 200 குடும்பங்களுக்கு 1000 ரூபாவா பிரிச்சு குடுத்துட்டேன். என்னை வாழ வைத்தது சென்னை தான். இந்த ஊருக்கு ஏதோ எதோ என்னால முடிஞ்ச உதவி இது” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த செயல் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. முன்னதாக, சூர்யா மற்றும் கார்த்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு 10 லட்சம் ஒதுக்கி கொடுத்தனர். அவர்களை தொடர்ந்து நேற்று நடிகர் ஹரிஷ் கல்யாணம் தன்னால் முடிந்த உதவியை செய்ததார்.
அரசுடன் கைகோர்த்து உதவுங்கள்… மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்.!
இதற்கிடையில், நேற்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்யும்படி மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது X பதிவில், மழையால் பாதிக்கப்பட்டு குடிநீர் மற்றும் உணவின்றி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் தவித்து வருகின்றனர். அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் மக்கள் இயக்க நிர்வாகிகள், தங்களைத் தன்னார்வலர்களாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.