தத்தளிக்கும் சென்னை: நானும் ஒரு லட்சம் கொடுக்கிறேன் – ஹரிஷ் கல்யாண் செக்.!

harish kalyan

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டது.  இதனால் வேளச்சேரி, அம்பத்தூர், கொளத்தூர் என ஒட்டுமொத்த சென்னையுமே, மழைநீரில் தத்தளித்தது. மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், அவர்களை பாதுகாப்பாக இருக்க கோரி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

நேற்று முதல் சென்னை நகரம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இருந்தாலும், பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இருப்பதால்,  மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வீடுகளில் சிக்கித் தவித்தனர். நேற்று காரப்பாக்கத்தில் வீடுகளில் தத்தளித்த நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் ஆகியோரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மீட்டனர்.

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் நடிகர் அஜித் நேரில் சென்று நலம் விசாரித்தார். அது மட்டும் இல்லாமல், அவர்களது வில்லாவில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள அஜித் வாகனம் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த இக்கட்டான சூள்நிலையில், சினிமா நட்சத்திரங்கள் ஆதரவற்ற மக்களுக்கு ஆதரவளித்து, தங்கள் பிரார்த்தனைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில், சூர்யா மற்றும் கார்த்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு 10 லட்சம் ஒதுக்கி கொடுத்தனர். அவரை போலவே நடிகர் ஹரிஷ் கல்யாணம் தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.

மோசமான நிர்வாகமும், பேராசையுமே காரணம்! இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆவேசம்!

தற்போது, நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஆம், இளம் நடிகர் ஒருவர் CMPRFக்கு ஒரு லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

 


முன்னதாக, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் மிச்சுவாங் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested