“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

நடிகர் ஜெயம்ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இரு தரப்பும் சமரச மன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Actor Jayam Ravi - Aarti

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் – ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. நடிகர் ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

நடிகர் ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரியும், 2009இல் நடைபெற்ற தனது திருமணத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி தேன்மொழி முன் நடைபெற்று வருகிறது

இன்று நடைபெற்ற விசாரணையில் ஜெயம்ரவி நேரில் ஆஜராகி இருந்தார். இந்த வழக்கில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும், குடும்பநல நீதிமன்றத்தின் சமரச மையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அதில் எடுக்கும் முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்