தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு அமலா பால் செய்த காரியத்தை பாருங்க.!
நடிகை அமலா பால் ‘ஆடை’ படத்தில் நடித்தது போல் மிகவும் தைரியமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்போது, ஒரு பெரிய விடுமுறைக்காக வெளிநாட்டில் தனது பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில், இவர் ஒரு அருவியில் குளிக்கும்பொழுது, ஆபத்தான மலையில் இருந்து குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
View this post on Instagram
இந்நிலையில், நேற்று அவர் தனது தாயின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மரத்தை அடர்ந்த காட்டிற்குள் நட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும், அந்த மரம் நடும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். ஆனால், சிலர் இந்த வீடியோவை பார்த்து விமர்சித்து வருகிறார்கள்.
View this post on Instagram
அதாவது, மரம் நடுவது நல்லது தான் ஆனால் அதை காட்டிலா நாட வேண்டும்? ரோட்டில் மரம் இல்லாத இடத்தில நடுவது நாளை நமக்கு அது நிழல் தரும் என்று கருத்து வருகிறார்கள்.
இதற்கிடையில், இவர் திவிஜா மற்றும் ஆடுஜீவிதம் ஆகிய மலையாளப் படங்களிலும், லோகேஷ் இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் தமிழ் திரைப்படமான ‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக்கான அஜய் தேவ்கன் நடித்த ‘போலா’ என்ற சிறப்புப் பாடலிலும் நடித்துள்ளார்.