சினிமாவில் அழகாக இருந்தால் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். ஆனால், நடிகை சார்மி இன்னும் திருமணம் முடிந்தும் அழகு குறையாமல் இருப்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் இருக்கிறாராம். தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை, காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு, 10 எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் சார்மி .
இவர் தமிழை விட தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த இவர் கடைசியாக 10 எண்றதுக்குள்ள படத்தில் கானா கானா எனும் பாடலில் நடனம் ஆடியிருப்பார். அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்க இவர் கமிட் ஆகவில்லை. இந்நிலையில், இவருக்கு பட வாய்ப்புகள் வந்தும் சினிமாவில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என கூறி மறுப்பு தெரிவித்து வருகிறாராம்.
இந்த தகவலை பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன் ” நடிகை சார்மி நடிக்கவே மாட்டேன் என்று சபதம் போட்டிருக்கிறார். சார்மி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இப்போது 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகும் இன்னும் நடிகை சார்மி அழகு கூட குறையாமல் அப்படியே இருக்கிறார். இதனால் பல இயக்குனர்கள், பல தயாரிப்பாளர்கள் அவரை தங்களுடைய படத்திற்காக தேடி வீட்டிற்கு செல்கிறார்கள். ஆனால், சார்மி நான் நடிக்கவே மாட்டேன் என கூறுகிறார். என்னுடைய இளமையை நான் தக்க வைத்துக்கொள்ள சரியான சாப்பாடு எடுத்துக்கொள்கிறேன் என கூறுகிறார்.
நான் இப்படி இருப்பதால் என்னை மீண்டும் சினிமாவில் நடிக்க அழைக்காதீர்கள். நான் இப்போது குடும்ப தலைவி எனவே இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன். எனவே, என்னிடம் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், படத்தில் நடிக்கவேண்டும் என்று வீட்டிற்கு வராதீங்க” என சார்மி கறாராக கூறுவதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் , நடிகை சார்மி படங்களில் நடிப்பதை தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…