பிரபல ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில் குமாரின் மனைவியும், யோகா பயிற்சியாளருமான ரூஹியின் காலமான செய்தி திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல சினிமா பிரபலங்களுக்கு யோகா ஆசிரியராக பணியாற்றிய ரூஹி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.
அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இவருடைய மறைவுக்கு பிரபல நடிகையான சார்மி கவுர் மிகவும் வருத்தத்துடன் தனது இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது ” ‘அன்புள்ள ரூஹி.. நான் உங்களுக்காக இப்படி ஒரு பதிவை என்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று சத்தியமாக நினைத்து கூட பார்க்கவில்லை.
விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி…அவருடன் அரசியல் பயணத்தில் நிற்பேன் – சமுத்திரக்கனி!
இன்னும் அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. நீங்கள் இப்போது இல்லை என்ற செய்தி பொய்யானது என்று தெரிந்த நன்றாக இருக்கும் என நான் நிக்கிறேன். எங்களுக்குள் 18 வருட அழகான நட்பு உள்ளது. நான் உன்னை மிஸ் செய்வேன் என்று சொல்வது ஒரு குறையாக இருக்கும். இருந்தாலும் உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
உங்களை இழந்து வாடும் உங்கள் குடும்பத்திற்கு கடவுள் இன்னும் பலத்தை கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்” எனவும் மிகவும் உருக்கமாக சார்மி கவுர் தெரிவித்துள்ளார். சார்மி கவுர் தமிழ் சினிமாவில் காதல் அழிவது இல்லை, 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…