சார்லி சாப்ளின்-2 படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார் படத்தின் பைனான்சியர் !!!!
நடிகர் பிரபுதேவா நடித்த படம் ‘சார்லி சாப்ளின் ‘. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி விட்டது. மேலும் இந்த படத்தில் நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளார்.இந்த படம் வரும் 25தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சார்லி சாப்ளின்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி பைனான்சியர் சோமசுந்தரம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த படத்திற்கு ரூ.16 லட்சம் கடன் பாக்கி உள்ள நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி படத் தயாரிப்பாளர் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜன. 24 க்குள் பதிலளிக்க படத்தயாரிப்பாளருக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.