மீண்டும் மீண்டும் “மாமனிதன்” ரிலீஸ் தேதியில் மாற்றம்.! வெறுப்பில் ரசிகர்கள்.!
இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “மாமனிதன்”. இத்திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் தயாராகி வெளியாகியிருந்தது.
ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. அதன்பின் இந்த ஆண்டு படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஆர்கே சுரேஷ் வாங்கி படம் மே 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார். அடுத்தாக சில காரணங்களால் படம் மே 20-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
தற்போது, இப்படம் நீண்ட நாட்களாக வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டதால், தயாரிப்பாளர்கள் அதன் வெளியீட்டு தேதியை அவ்வப்போது மாற்றி வருகின்றனர். அந்த வகையில், மே 20 முதல் தேதியைத் தள்ளிவிட்டு, ‘மாமனிதன்’ படத்திற்கு ஒழுக்கமான எண்ணிக்கையிலான தியேட்டர்கள் வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்பியதால் ஜூன் 24 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் வெளியீட்டை மாற்றியுள்ளனர் அதாவது அந்த தேதியில் இரண்டு புதிய படங்கள் வெளியீடு இருப்பதால் இந்த படம் ஒரு நாள் முன்னதாக ஜூன் 23 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
— R.Seenu Ramasamy (@seenuramasamy) May 20, 2022