ரிலீஸ் தேதியில் மாற்றம்? ஒரே நாள் முன்பே வெளியாகும் ‘லியோ’ திரைப்படம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு படத்தின் டிரைலரும் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமானது என்றே கூறலாம். அந்த அளவிற்கு படத்தின் டிரைலர் அதிரடி ஆக்சன் காட்சிகளால் நிறைந்து அனைவரையையும் புல்லரிக்க வைத்திருந்தது. இதனையடுத்து படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், லியோ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாவதாக தான் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அதற்கு முன்னதாக ஒரு நாட்களுக்கு முன்பே வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. எப்படி என்றால் லியோ திரைப்படத்திற்கு லியோ” திரைப்படம் வரும் 18-ம் தேதி பிரீமியர் ஷோவாக வெளியாகிறதாம். பிரீமியர் ஷோ என்றாலே பிரபலங்கள் மட்டும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் தான் போட்டு காட்ட படும். அதைபோல சில குறிப்பிட்ட திரையரங்குகளில் தான் போடப்படும்.
ஆனால், லியோ திரைப்படத்தின் பிரீமியர் ஷோ 1,000 திரையரங்குகளில் வரும் 18-ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் என வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. “லியோ” சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்தினமே பிரீமியர் ஷோவாக வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .
மேலும்,சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் பல விஷயங்களை பேசினார். குறிப்பாக விஜய் லியோ திரைப்படத்தின் ட்ரைலரை முதலில் பார்த்துவிட்டு அடுத்ததாக 3 முறை தொடர்ச்சியாக பார்த்ததாகவும் படத்தின் ரன்னிங் டைம் 2.43 அதனை வைத்து 2.43 நிமிடத்தில் டிரைலரை கட் செய்தோம் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.