Silk Smitha [FILE IMAGE]
தமிழ் சினிமாவில் கவர்ச்சியால் ரசிகர்கள் மனதை கட்டி போட்ட நடிகைகளில் ஒருவர் சில்க் சுமிதா. 80ஸ் காலகட்டத்தில் இவர் ஆடிய கவர்ச்சி பாடல்கள் இப்போது இருக்கும் இளைஞர்கள் வரை ரசித்து பார்க்க கூடிய வகையில் இருகிறது. அந்த அளவிற்கு சில்க் சுமிதா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
80ஸ், 90ஸ்-களில் அசைக்க முடியாத நடிகையாக வலம்வந்த சில்க் சுமிதாவுக்கு இன்று பிறந்த நாள் தினம். இதனை முன்னிட்டு அவருடைய பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள் நடித்த படங்களை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இதனையடுத்து, ஏற்கனவே சில்க் சுமிதாவின் வாழ்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்…திரெளபதி நடிகை ஷீலா அறிவிப்பு.!
ஆனால், அந்த படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது இன்று சில்க் சுமிதா பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் படத்திற்கான அறிவிப்பு படத்தின் தலைப்பு கூடிய மற்ற விவரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சில்க் சுமிதாவின் வாழ்கை வரலாற்று படத்தை பிரபல இயக்குனரான ஜெயராம் இயக்கவுள்ளாராம். சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் இந்த படத்தில் ஆஸ்ரேலியவை சேர்ந்த நடிகை சந்திரிகா ரவி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்திரிகா ரவி இந்த படத்திற்கு முன்பு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் , இந்த திரைப்படத்திற்கு ‘சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.பி. விஜய் தயாரிக்கிறார். இன்று சில்க்ஸ் சுமிதா பிறந்த நாள் என்பதால் இதனை முன்னிட்டு படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…