கபடி, கிரிக்கெட்டை தொடர்ந்து கால்பந்தை கையிலெடுத்த சுசீந்திரன்! விஷால் வெளியிட்ட ‘சாம்பியன்’ போஸ்டர்!!
வெண்ணிலா கபடி குழு, ஜீவா போன்ற படங்களை எடுத்த இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு புதிய படத்தை எடுத்து வருகிறார். முந்தைய படங்களில் கபடிக்கும், கிரிக்கெட்டும் முக்கியதுவம் கொடுத்து அதில் நடக்கும் அரசியல்களையும் தோலுறித்து காட்டியவர் இயக்குனர் சுசீந்திரன்.
இவர் எவ்வளவு ஆழமாக படமெடுப்பாரோ அதே போல வேகமாக படமெடுப்பதிலும் வல்லவர். ஒரு படம் ரிலீஸாகும் சமயத்தில் அடுத்தப்பட இறுதிகட்ட ஷூட்டிங்கை எட்டிவிடுவார். அதே போல தற்போது சாம்பியன் பட வேலை நடந்து கொண்டிருக்கும்போதே ஏஞ்சலினா எனும் படத்தையும் எடுத்து வருகிறார்.
இதில் சாம்பியன் படத்தின் முதல் போஸ்டரை நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
DINASUVADU