GOAT : கோட் படத்தை பற்றி பேசி பிரபலங்கள் அந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட் ( The Greatest of All Time). இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க தான் தென்னிந்திய சினிமாவே ஆவலுடன் காத்து இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, அஜ்மல் அமீர், ராகவா லாரன்ஸ், மாளவிகா சர்மா, மோகன், கிச்சா சுதீப், சினேகா பிரசன்னா, பிரேம்கி அமரன், கஞ்சா கருப்பு, ஜெயராம், அரவிந்த் ஆகாஷ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் கூட நல்ல வரவேற்பை பெற்று யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது. இந்த படம் எந்த மாதிரி ஒரு ஜானரில் இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோட் படம் பற்றி ஜீ. மகேந்திரா, பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் குமார் ஆகியோர் பேசி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. முதலில் பேசிய ஜீ. மகேந்திரா ” கோட் படம் கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்ப்பதை விட மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படம் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும். படத்தில் நானும் ஒரு கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன்.
விஜயின் சினிமா பயனத்தில் துப்பாக்கி படத்திற்கு முன் பின் என இரண்டாக பிரிக்கலாம் அது போன்ற ஒரு சிறந்த படமாக கோட் அமையும். அந்த அளவிற்கு கோட் படத்தின் கதை அருமையாக வந்து இருக்கிறது. இந்த கோட் படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, ஆகியோர் சிபிஜ அதிகாரிகளாக வருகிறார்கள்” எனவும் ஜீ. மகேந்திரா தெரிவித்துள்ளர்.
அவரை தொடர்ந்து பேசிய அபிஷேக் குமார் ” கோட் படம் கண்டிப்பாக வேற லெவலில் தளபதி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அமையும். வெங்கட் பிரபு மாஸ் படத்தில் தான் எமோஷனலான கதையை எழுதி இருப்பார். அதனை தொடர்ந்து இந்த கோட் படத்திலும் அப்படியான எமோஷனல் இருக்கிறது. கண்டிப்பாக படம் நீங்கள் நினைக்கிற மாதிரி வராது அதை விட நன்றாக வரும்” எனவும் தெரிவித்துள்ளர்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…