ஆண்டு தோறும் மக்கள் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட காத்துள்ளனர். இவர்களை போல சினிமா பிரபலங்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள்.
அந்த வகையில், இந்த வருடம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி வருகிறது. எனவே இந்த வருடம் தலை தீபாவளியைக் கொண்டாடும் சினிமா பிரபலங்களைப் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் இந்த வருடம் ஜூன் மாதம் தான் திருமணம் செய்துகொண்டார்கள். எனவே இந்த ஆண்டு தான் இவர்களுக்கு தலை தீபாவளி. மேலும் இவர்களுக்கு இன்னோரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்குழந்தை சமீபத்தில் பிறந்தது.
புகழ் – பென்ஸியா
குக் வித் கோமாளில் பிரபலம் புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸியாவை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். கடுமையாக உழைத்து தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வளம் வந்துகொண்டிருக்கும் புகழும் தனது மனைவியுடன் தலை தீபாவளியை கொண்டாடுகிறார்.
ஆதி- நிக்கி கல்ராணி
நடிகர் ஆதி நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து கடந்த மார்ச் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள். இந்த தம்பதியும் இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
ரவீந்தர் – மகாலட்சுமி
தயாரிப்பாளர் ரவீந்தரும், நடிகை மகாலட்சுமியும் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணத்திற்கு ஒரு சில விமர்சனங்கள் வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துகொள்ளமல் சந்தோசமாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களும் இந்த ஆண்டு தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
ஆர்யன் – ஷபானா
“பாக்கியலட்சுமி” புகழ் நடிகர் ஆர்யன் மற்றும் “செம்பருத்தி” புகழ் ஷபானா ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளும் இந்த வருடம் மிகுந்த சந்தோசத்துடன் தலை தீபாவளியை கொண்டாடவுள்ளனர்.
மதன் பாண்டியன் – ரேஷ்மா
நடிகர் மதன் பாண்டியன் நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் தனது காதலியாக மாறிய ரேஷ்மா முரளிதரனை திருமணம் செய்து கொண்டார். நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் இவர்களும் இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடவுள்ளனர்.
சிது சித் – ஸ்ரேயா அஞ்சன்
சீரியல் நடிகர் சித்து சித் மற்றும் நடிகை ஸ்ரேயா அஞ்சன் ஆகியோர் சென்னையில் நவம்பர் 22 அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் கலந்து கொண்டனர். இந்த தம்பதிகளும் இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…