நடிகை ஆஷா சரத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். ஆஷா தமிழில் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இவர் தூங்காவனம் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இவர் எவிடே என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து, இவர் மேக்கப் இல்லாமல் கலங்கிய முகத்துடன், தனது கணவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் கட்டப்பனை போலீசில் தெரிவிக்க வேண்டும் என தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து, இதை உண்மை என நம்பி ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதனை ஷேர் செய்தனர். அதன் பின் இது படத்துக்கான விளம்பரம் என்று தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து, இவரது இந்த பதிவுக்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தது.
மேலும், இதுகுறித்து ஸ்ரீஜித் பெருமனா என்ற வழக்கறிஞர் இடுக்கி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளார்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…