நடிகர் ஸ்ரீக்கு என்ன நடந்தது? உண்மையை உடைத்த நெருங்கிய நண்பர்!

நடிகர் ஸ்ரீ ஸ்கிசோஃப்ரினியா என்கிற மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய நெருங்கிய நண்பர் தகவலை தெரிவித்துள்ளார்.

Actor Sri

சென்னை :  ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் புகழ்பெற்ற ஸ்ரீ, தற்போது முற்றிலும் மெலிந்து வேறு மாதிரியான தோற்றத்தில் மாறியிருப்பது ரசிகர்களின் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில், குறிப்பாக அவர் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இதற்கு காரணம். இதில் அவர் அரைகுறை ஆடைகளுடன் காணப்படுவதாகவும், அவரது உடல் மற்றும் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பதை நாம் பார்க்க முடிந்தது.

எனவே, நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது இந்நிலையில், ஸ்ரீயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் எழுந்த கேள்விகள் என்னவென்றால் அவருக்கு என்ன ஆச்சு என்று தான்.

இந்த சூழலில், அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சினிமா வட்டாரத்தில் இருப்பவருக்கு கொடுத்த தகவலின் படி நடிகர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? அவர் எங்கு இருக்கிறார் என்பதற்கான தகவலும் கிடைத்துள்ளது.

நடிகர் ஸ்ரீயின் நெருங்கிய நண்பர் கொடுத்த தகவலின் படி ” நாங்கள் பலமுறை தொடர்பு கொண்டும் நடிகர் ஸ்ரீ யாருடைய அழைப்பையும் ஏற்காமல் இருக்கிறார், ஆனால் அவர் குர்கானில் இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. அவருக்கு ஸ்கிசோஃப்ரினியா நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இதனால் அவர் உண்மையில் இல்லாத குரல்களைக் கேட்கும் மாயத்தோற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ‘வில் அம்பு’ திரைப்படத்திற்காக அவருக்கு சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. நாங்கள் விரைவில் அவரைக் கண்டறிந்து, அவருக்கு தேவையான உதவிகளைச் செய்து, அவரை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவோம்” எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீ சிறந்த நடிகர் மீண்டும் அவர் பழையபடி இயல்பு நிலைமைக்கு திரும்பவேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்கிசோஃப்ரினியா என்றால் என்ன? 

ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு மனநோய். இதனால்உண்மையில் இல்லாத குரல்கள் கேட்பது, எ.கோ., யாரோ பேசுவது போல உணர்வது. உண்மையில்லாதவற்றை உண்மை என நம்புவது, “யாரோ தன்னைக்  கண்காணிக்கிறார்கள்” என்று நம்புவது. அதைப்போல, தெளிவாக சிந்திக்க முடியாமல், தெளிவாக பேச முடியாமல் செயல்களில் ஒருமை இல்லாமல் இருப்பது என பிரச்சினைகள் வருவது. இந்த நோயில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் நல்ல மருத்துவரை பார்த்தால் மட்டுமே வெளியே வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nayinar Nagendran
CM Break fast Scheme
china donald trump
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop