அச்சச்சோ…என்ன சிம்ரன் இதெல்லாம்..? தமன்னாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!!

tamanna TROLL

நடிகை தமன்னாவின் பெயர் தான் கடந்த வாரத்தில் இருந்து தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், அவர் தற்போது நடித்துமுடித்துள்ள வெப் தொடரான ஜீ கர்தா (Jee Karda)  தொடரின் டிரைலர் வெளியாகி இருந்தது. அந்த ட்ரைலரின் சில காட்சிகளில் தமன்னா சில கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தார்.

மேலும், இதனை தொடர்ந்து இந்த ஜீ கர்தா (Jee Karda) வெப் தொடர் இன்று அமேசான் பிரேமில் வெளியான நிலையில், அந்த வெப் தொடரில் இருந்து எடுக்கப்பட்ட சில காட்சிகள் இணையத்தில் வைரலாகி தமன்னா ரசிகர்களை மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்படி என்ன காட்சி என்றால், இதுவரை இல்லாத அளவிற்கு தமன்னா மிகவும் ஆபாசமான காட்சிகளில் நடித்துள்ளார். அதற்கான வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளார்கள்.

இந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் பலரும் டிவிட்டரில் ” இப்படி ஒரு கதாபாத்திரத்தில் எதற்காக நடித்தீர்கள்..? எனவும், ரொம்ப மோசமாக இருக்கும் மேடம் எனவும் தமன்னாவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலர் வடிவேலுவின் வசனம் என்ன சிம்ரன் இதெல்லாம் எனவும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

நெட்டிசன் ஒருவர் ” அந்த காட்சியை தனது டிவிட்டரில் பக்கத்தில் வெளியீட்டு தமன்னா தனது சினிமா கேரியருக்கு  தீ வைக்க தயாராக உள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்